பக்கம்:கி.வா.ஜ வின் சிலேடைகள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*34 கி.வா.ஜ.வின் சிலேடைகள்

சாரீரம்' என்று நண்பர் கூறினார். கீசுகீசென்னும் ஆனைச் சாத்தன் என்ற பாட்டை அவர் பாடவில்லையா? அதைத் தான் நான் சொன்னேன்' என்றார் இவர்.

மாதுளங்கனி

ஈரோட்டில் இவருடைய அன்பர் திரு. சேஷையர் ஒரு வக்கீல். அவருக்குக் கீதா என்ற பெண் இருந்தாள். அவளை இவர் தம் பெண்ணாகவே பாவித்து அன்பு வைத்திருந்தார். அவள் ஒரு நா ய் வளர்த்து வந்தாள். பிறகு அதை வேறு ஊருக்கு அனுப்பிவிட்டார்கள். 'இவளுக்கு நாய் மேலும் பிரியம். என்னிடமும் பிரியம். இப்போது நாயின்மேல் உள்ள பிரியத்தையும் சேர்த்து எ ன் மே ல் வைத்திருக் கிறாள்' என்று வேடிக்கையாகச் சொல்வார் இவர்.

அவர்கள் வீட்டில் மாதுள மரம் உண்டு. மாதுளம் பழத்தை உதிர்த்துக் கொடுத்தால் அதை உண்ணாமல் அழகு பார்த்துக்கொண்டே இருப்டார் இவர். கீதா ஒரு நாள் மாதுளங்கனி கொடுத்தாள். இது கீதா என்ற மாது உளங் கனிந்து கொடுத்த மாதுள்ங்கனி, ஆகையால் அதிகச் சுவை யுடையது' என்று சொல் லி உண்டார். அப்படிச் சொன்னதை அவள் குமுதம் பத்திரிகைக்கு அனுப்பி வெளி யிடச் செய்தாள். அவள் இப்போது இல்லை.

பெருங்குடிமக்கள்

அன்பர்கள் சிலரைப் பற்றிப் பேசிக் கொண்டிருந் தார்கள். அவர்கள் குடிப் பழக்கம் உள்ளவர்களாம். "உயர்ந்த குடும்பத்தில் பிறந்தும் இந்தக் கெட்ட பழக்கம் உடையவர்களாக இருக்கிறார்கள்' என்று அங்கலாய்த் தார்கள். 'பெருங்கு டி ம க்கள் அல்லவா?: என்று கேட்டார் இவர். . . . .