பக்கம்:கி.வா.ஜ வின் சிலேடைகள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கி.வா.ஜ.வின் சிலேடைகள் 47

உறிஞ்சிக்குடியுங்கள். தூக்கிக் குடித்தால் சிந்தும், தம்ளராக இருந்தால் விளிம்பு இருக்கும்; இதற்கு இல்லை' என்றார் அன்பர். .

'விளிம்பு என்று சொல்லாதீர்கள்; வ ரம் பு என்று சொல்லுங்கள். வ ர ம் பு இல்லாவிட்டால் எப்போதும் தொல்லைதான்' என்றார் இவர். *,

வறட்டுமா ?

நெடு நேரம் பேசிக்கொண்டிருந்த ந ண் ப ர் ஒருவர் புறப்பட்டபோது, வறட்டுமா? என்று ரகரத்தை அழுத்திக் கேட்டார். "கொஞ்சம் தண்ணீர் குடியுங்கள்' என்றார் இவர். - 签表

  • { ஏன் 2” . .

'நீங்கள் வறட்டு மா என்றீர்களே! தொண்டையில் அடைத்துக் கொள்ளும், தண்ணிர் குடியுங்கள் என்றேன்.'

1968-ஆம் ஆண்டு தஞ்சாவூர்ப் பெரிய் கோயிலில் இராஜ: ராஜ மன்னனுடைய சதய விழாவைக் கொண்டாடத் தொடங்கினார்கள். அந்த ஆண்டு மிகச் சிறப்பாக விழாவை நடத்தினார்கள். இப்போதும் ஆண்டுதோறும் விழா நடைபெறுகிறது. அந்த ஆண்டில் பெருவுடையாருக்கு மிகப் பெரிய அபிஷேகம் நடந்தது. ஆயிரக்கணக்கான குடம் பால் வந்தது; பஞ்சாமிர்த அபிஷேகம் அப்படித்தான்: சந்தனாபிஷேகமே அரை மணி நடைபெற்றது. .

அந்த விழாவில் பேசுவதற்கு இவர் சென்றிருந்தார். காலையில் அபிஷேகம் நடந்தபோது முக்கியமானவர்கள் சந்நிதியில் கர்ப்பக்கிருகத்தை ஒட்டியுள்ள அர்த்த மண்ட பத்தில் உட்கார்ந்து தரிசனம் செய்து கொண்டிருந்தார்கள், இ வரும் அங்கே அமர்ந்திருந்தார். சந்தனாபிஷேகம்