பக்கம்:கி.வா.ஜ வின் சிலேடைகள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-46 கி.வா.ஜ.வின் சிலேடைகள்

பார்த்துச் சாமான்கள் வாங்கி வரலாம் என்று தோன்றியது. சென்னைக்கு வந்தார். மூர்மார்க்கெட்டுக்குப் போய்ச் சுற்றிப் பார்த்தார். அங்கே எல்லா வகையான பண்டங் களும் கிடைக்கும். நம் ைப யி ல் இருப்பதை நம்மை அறியாமலே எடுத்துக்கொள்ளும் க த் த ரி க் கோ ற் கலைஞர்கள் அங்கே இருப்பார்கள். அந்த வியாபாரி, பிறகு சாமான்கள் வாங்க லாம் என்று தி ர் ம்ா னித் து மார்க்கெட்டுக்கு வெளியே வந்தார். இடுப்பில் கச்சையில் கட்டி வைத்திருந்த ப ண த் ை த த் தடவிப் பார்த்தார். கச்சையே இல்லை. யாரோ கத்தரித்துக் கொண்டார்கள். 'ஹா!' எனறு அதிர்ச்சி தாங்காமல் கூவினார். அங்கேயே உயிர் போய்விட்டது. . -

இந்தச் செய் தி அவருடைய ஊருக்குப் போயிற்று.

அ வ ைர ப் பாராட்டிப் பேசியவர், 'எப்படியெல்லாம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டிச் சேர்த்தார்! சும்மாவா பணம் வரும்? காசா? லேசா?' என்றார். அவரைப்

பரிகாசம் செய்கிறவர், "அப்பொழுதே .ெ ச ா ன் னே ன்; வயிற்றுக்கு வஞ்சம் பணணிப் பணம் சம்பாதிக்க வேண்டுமா" என்று கேட்டேன். அந்த மனிதன் கேட்கவில்லை. இப்போது என்ன ஆயிற்று அந்தப் பணமே அவன் உயிரை வாங்கி விட்டது. காசாலே சா! இது தான் அவன் விதி' என்றார். . கா - சா - லே - சா என்ற நான்கு எழுத்துக்களில் முதல் இரண்டையும் ஒன்றாகவும் பின் இரண்டையும் ஒன்றாகவும் சேர்த்துச் சொன்னால் (காசா-லேசா) புகழ்ச்சியாக இருக் கிறது. முன் மூன்றை யும் சேர்த்தும் நாலாவதைத் தனித்தும் வைத்துச் சொன்னால் (காசாலே-சா) இகழ்ச்சி யாகம்ாறுகிறது. இது ஒருவகைச் சொல் இன்பம். * : * >

வரம்பு இல்லை இவருக்கு ஒரன்பர் ஒரு கப் பால் கொண்டு வந்து

கொடுத்தார். இவர் சீப்பிச் சாப்பிடுவதை விரும்புவதில்லை, தூக்கிச் சாப்பிட்டால் பால் மேல்ே சிந்தும் பரவாயில்லை;