பக்கம்:கி.வா.ஜ வின் சிலேடைகள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கி.வா.ஜ.வின் சிலேடைகள் 49.

கொண்டே அவர் பேசினார். 'என்ன உடம்பு?' என்று கேட்டார் இவர். 'பல்வலி' என்றார். "ஒரு வலி வந்தாலே சங்கடம். பல்வலி வந்தால் சொல்ல வேண்டுமா?" என்றார். இவர். (பல்வலி-பல்லில் வலி, பலவகை வலிகள்.).

ஊசியும் தொண்டையும்

குழந்தைக்கு அதன் தாய் உப்புமாவை உண்ணும்படி அளித்தாள். அது முதல் நாள் செய்தது. குழந்தைக்கு அது பிடிக்கவில்லை. ஒக்காளித்தது. அருகில் இவர் இருந்தார். அந்தப் பெண்மணி, உப்புமாவைத் தின்ன முடியவில்லையா? அது தொண்டையில் குத்துகிறதோ?' என்று கோபித்துக் கொண்டாள். இவர் அந்தப் பழைய உப்புமாவில் சிறிது

வாங்கி வாயில் போட்டுப் பார்த்தார். "ஆமாம், தொண்டையில் குத்தத்தான் குத்தும்” என்றார். ஏன்?" என்று த ய் கேட்டாள். ஊசி யிருக்கிறது' என்று.

சொல்லிச் சிரித்தார் இவர். பழைய உப்புமா அல்லவா?

வழுக்கெடுக்கும்

ஒரு தலத்துக்கு இ வ. ரு ம் இவர் குடும்பத்தினரும் போயிருந்தார்கள். சில நண்பர்களும் உடன் வந்தார்கள். கோயிலில் இருந்த திருக்குளத்தில் இறங்கிக் கால் கழுவிக் கொண்டு வரலாம் என்று சென்றார்கள். இந்தத் தீர்த்தம் மிகவும் புனிதமானது. பாபங்களைப் போக்குவது' என்று ஓர் அன்பர் சொன்னார். படிக்கட்டில் பாசியாக இருந்தது. கால் வைத்தால் வழுக்கி விடும் என்று தோன்றியது. அதைப் பார்த்த இவர், நீங்கள் இதை வழுக்கெடுக்கும் என்று சொல்கிறீர்கள். அது இருகாலும் உண்மை' என்றார். இரு காலா? முக்கால் என்று சொன்னால்தானே உறுதி யாகும்?' என்று அன்பர் கேட்டார். வழுவைக் கெடுக்கும் என்று நீங்கள் சொன்னீர்கள் அது ஒன்று. இது வழுக்கு எடுக்கும் என்று நான் சொல்கிறேன், அதுவும் பொருந்து