பக்கம்:கி.வா.ஜ வின் சிலேடைகள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

‘50 : கி.வா.ஜ.வின்-சிலேடைகள்

மல்வவா? ஆகவே இரு கா லு ம் உண்மை’ என்று விளக்கினார் இவர்.

தலையெழுத்து

மயிலம் தமிழ்க் கல்லூரியில் பேராசிரியராக இருக்கும் வித்துவான் வே. சிவசுப்பிரமணியன் இவருடைய நண்பர். இவருடைய வீட்டிலுள்ளவர்களைப் போலவே பழகுவார். அவர் மயிலத்திலிருந்து பிற்பகலில் புறப்பட்டு இரவு சென்னையில் உள்ள இ வ.ர் வீடாகிய காந்தமலைக்கு வருவார். வே. சிவசுப்பிரமணியன் என்று முழுப் பெயரையும் சொல்லாமல், வே. சி.' என்று இவர் சொல்வார். :: இரவில் வேசி வருவது இயல்புதான்' என்று பரிகாசம் செய்வார். ஒரு நாள் வேறு ஒரு நண்பருடன் அப்புலவர் இவர் வீட்டுக்கு வந்தார். இவர் பிள்ளைகள், வேசி வந்தாயிற்று' என்று. கூவினார்கள். உடன் வந்த நண்பர், என்ன? வேசியா? யாரைச் சொல்கிறீர்?' என்று கேட்டார். இவரைத்தான்' என்று இவர் புலவரைச் சு. ட் டி க் காட்டினார். 'ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?' என்று அந்த நண்பர் கேட்டார். 'இவர் தலையெழுத்து அது. அதை மாற்ற முடியுமா?" என்று விடை வந்தது. (தலையெழுத்து-பெயரின் முதல் எழுத்துக்கள், விதி.)

ஆணி இல்லை -

ஒருவர் தம் பெண்ணுக்குத் திருமணம் செய்ய எண்ணினார். தை மாதமே செய்ய முயன்றார். முடிய வில்லை. பல காரணங்களால் தள்ளிப் போயிற்று. இறுதியில் ஆனி மாதக் கடைசித் தேதியில் முகூர்த்தம் வைத்தார். அதைப்பற்றி இவரிடம் சொல்லி, எ ன் ன செய்வது? கல்யாண மண்டபம் கிடைக்கவில்லை; ஆனிக் கடைசியில் தான் கிடைத்தது. முகூர்த்தம் வைத்தேன்' என்றார். இவர், அதனால் என்ன? ஆனியில் செய்தால் ஆனி இல்லை' என்றார். (ஆனி-ஆனி மாதம், ஹானி.)