பக்கம்:கி.வா.ஜ வின் சிலேடைகள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கி.வா.ஜ.வின் சிலேடைகள் 5i

அச்சில் இட்டார்

ஒரு புத்தக வெளியீட்டின்போது இவர் பேசினார் : அருமையான கருத்துக்களை இனிமையான நடையில் எழுதியிருக்கிறார் இந்த ஆசிரியர். பாகு போல் இனிக்கும் அவற்றை எல்லோரும் ஏற்றுப் பயன் அடையும்படி அச்சிட்டிருக்கிறார். பாகை அச் சாக் கி னால் தானே எல்லோரும் பெற்றுப் பயனடையலாம்? (அச்சு:வெல்ல அச்சு, புத்தக அச்சு.)

பலகை வேண்டாம்

நண்பர் வீ ட் டி ல் விருந்துண்ணச் சென்ற போது இவருக்கு மாத்திரம் ஒரு பலகையைக் கொண்டுவந்துபோட் டார்கள். மற்றவர்களுக்குப் பலகை இல்லாதது கண்டு இவர், ' .ே வ ண் டாம் ' என்றார். பரவாயில்லை; உட்காருங்கள்' என்று நண்பர் சொன்னார். 'இரண்டு கை இருந்தும் சாப்பிடும்போது ஒரு கைதானே உபயோகப் படுகிறது? பலகை எதற்கு?' என்றார். இவர். (பலகைஅமரும் பலகை, பல கைகள்.)

நாற்காலி மனிதர்

கூட்டத்துக்குத் தலைமை தாங்க இருந்தவர் வரவில்லை. இவரைத் தலைமை தாங்கச் சொன்னார்கள். இவர்

மறுத்தார். "நீ ங் க ேள தலைவராக அமர வேண்டும்' என்றார்கள் அன்பர்கள். 'இரண்டு கால் மனிதனை நாற் காலி மனிதன் ஆக்க உங்களுக்கு ஏன் அவ்வளவு ஆசை?' என்று கேட்டார் இவர். o

க | ல டி.

காஞ்சி காமகோடி பீடாதிபதிகளைப் பற்றிய பேச்சு வந்தது. அவர்கள் காலால் நடந்தே இந்தியா முழுவதையும்