பக்கம்:கி.வா.ஜ வின் சிலேடைகள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 கி.வா.ஜ.வின் சிலேடைகள்

சுற்றி வந்தார்கள் என்பதை ஒரன்பர் சொன்னார். ஆதி சங்கரர் அப்படிச் செய்தார். இவர்களும் அவரைப்போல், செய்கிறார்கள்' என்று மற்றோர் அன்பர் சொன்னார். இவர் அப்போது, "ஆம், அவர் பிறந்ததும் காலடியில்: பாரதபூமி முழுவதும் சென்று சிறந்ததும் காலடியிலேயே' என்றார். .

நாடாக் கட்டில்

இரவில் வெளியூரில் தங்கியிருந்தார். இவர். ஒரு நண்பர் வீட்டில் இவர் உண்டு உறங்கினார். படுப்பதற்கு அந்த வீட்டுக்காரர் கட்டில் கொடுப்பதாகச் சொன்னார். அது நாடாக் கட்டில். அதில் ஒருகால் மோட்டுப் பூச்சி இருக். குமோ என்று இவர் பயந்தார். 'கட்டில் வேண்டாம். மோட்டுப் பூச்சி யிருக்கலாம்' என்றார். 'இல்லை; இது: நாடாக் கட்டில், இராது' என்று நண்பர் சொன்னார். "நானும் அதைத்தான் சொல்கிறேன். நான் நாடாக்கட்டில் என்று சொல்கிறேன்' என்றார். இவர். (நாடா கட்டி, யிருக்கும் நாடா நாடாத விரும்பாத:) -

தந்தி வந்தது

விநாயகர் அகவலைப் பற்றிய சொற்பொழிவு நடை

பெறுகிறது. இவர் பேசிக் கொண்டிருக்கிறார் : . . .

அப்போது சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருவஞ்சைக்களம்

கோயிலுக்குச் சென்று இறைவனை வணங்கினார். சேரமான் பெ ரு மாள் நாயனார் அரண்மனையில் இருந்தார். ஒளவையார் வழக்கம்போல் வி தா ய க ைர ப் பூசிக்கத்.

சுந்தரமூர்த்தி நாயனார் . இவ்வுலகில் . அவதரித்துச் செய்த தொண்டுகள் போதுமென்று எண்ணிய இறைவன், கைலாசத்திலிருந்து வெள்ளை யானையை அனுப்பினான்.