பக்கம்:கி.வா.ஜ வின் சிலேடைகள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 கி.வா.ஜ.வின் சிலேடைகள்

அன்பர் : அது எப்படி, இரண்டு ஊர்கள் உங்கள் ஊராகும்?

இவர் : நான் அந்தணர்களில் எங்க்ள் பிரிவையல்லவா சொன்னேன்? நான் வடமன்.

(வடமதுரை-வடமனாகிய துரை.)

கடசாக் குடியர்

இவர் ரெயில் வண்டியில் மனைவியுடன் பயணம் செய்து கொண்டிருந்தார். கூசா நிறையத் தண்ணீர் வைத் திருந்தார். அருகில் இருந்த நண்பர் ஒருவர் தண்ணிர் கேட்டார். அவருக்குத் தம்ளரில் தண்ணீர் எடுத்துக் கொடுத்தார். இவருக்கும் தாகமாக இருந்தமையால் கூசாவோடு குடித்தார். அதைக் கண்டு அருகில் இருந்த நண்பர் சிரித்தார். "என்ன, கூ சாக் கு டி ய ர் என்று. சிரிக்கிறீர்களா?' என்றார் இவர்.

(கூசாக்குடியர்-கூசாவோடு குடிப்பவர், கூசாத குடிகாரர்.) - -

தானாகப் போடுதல்

இவருடைய வீட்டுக்கு ஒரு விருந்தாளி வந்தார். எல்லோரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்; சாம்பார் சாதம் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். விருந்தாளி' நன்றாகப் பழகினவர். ஆதலின் கேட்டு வாங்கிச் சாப்பிடு: கிறவர். “கொஞ்சம் தான் போடுங்கள்’’ என்றார். இவர் உடனே, "கேட்டா போடுவார்கள்? தானாகப் போட. வேண்டாம்?' என்றார். ... w x: ; -

பிரதி உபகாரம் ஓர் அன்பர் இவர் எழுதிய நூல் ஒன்றைக் கேட்டார். இவர் அதை அன்பளிப்பாக அவருக்கு வழங்கினார்.