பக்கம்:கி.வா.ஜ வின் சிலேடைகள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கி.வா.ஜ.வின் சிலேடைகள் 73 "நீங்கள் இதற்கு விலை தர வேண்டாம். நீங்கள் உபகாரம் செய்யாமலே இந்தப் பிரதி உபகாரம் செய்கிறேன்' என்று சொல்லிக் கொடுத்தார். -

உயர்த்தி

இவருடைய நண்பர் ஒருவருடைய பெண் நல்ல உயரமாக இருந்தாள். நண்பர் அவளுக்குத் திருமணம் செய்வதைப்பற்றிக் கவலைப்பட்டார். இவள் உயரத்துக்கு மேலே உயரமான பிள்ளையைப் பார்க்க வேண்டுமே!’ என்றார். உடனே இவர், 'உங்கள் பெண் ஒசத்தி (உய்ர்த்தி): அவளுக்கென ஒசத்தி'யான மாப்பிள்ளை நிச்சயமாகக் கிடைப்பான்' என்றார். (ஒசத்தி-உயரம், மேலான சிறப்பு.) -- * , -

இக்கட்டு

ஒரு முறை ஆப்பக்கூடலில் உள்ள சர்க்கரை ஆலைக்குப் போய் எல்லாப் பகுதிகளையும் இவர் பார்த்தார். அங்குள்ள அன்பர்கள் கரும்பை ஆலையில் புகுத்துவது முதல் சர்க்கரையை மூட்டைகளிற் சேமிக்கும் வரையில் நடைபெறும் செயல் முறைகளைக் காட்டி விளக்கினார்கள். பிறகு சிற்றுண்டி வழங்கினர். கரும்புச் சாற்றை வழங்கினர். அதை உண்ட இவர் மறுநாள் வேறு ஊருக்குச் சென்று பேச வேண்டியிருந்தது. அங்கே போனார். கரும்புச் சாறு சாப்பிட்டதால் இவருக்குத் தொண்டை கட்டி விட்டது. பேச முடியவில்லை. இதைப் பற்றி ஓர் அன்பரிடம் இவர் பிறகு சொன்னது வருமாறு: "இப்படிக் கரும்புச் சாறு தொண்டையைக் கட்டுமென்றால் நான் அதைக் குடித்தே இருக்க மாட்டேன். தொண்டை கட்டிவிட்டது. இக் கட்டு வந்து பேச முடியாத இக்கட்டு வருமென்று எண்ணவே இல்லை' என்றார். (இக்கட்டு-இந்தத் தொண்டைக் கட்டு, இடைஞ்சல்.) - . . . .

5 سنة