பக்கம்:கி.வா.ஜ வின் சிலேடைகள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

கி.வா.ஜ.வின் சிலேடைகள்

நாணயம்

காளிகாம்பாள் கோயிலில் ராஜகோபுரத்துக்கு அஸ்தி வாரம் போட்டார்கள். அப்போது வந்து அஸ்திவாரத்தில் செங்கல்லைப் பதிக்க வேண்டுமென்று கோயிலைச் சேர்ந்த அன்பர்கள் இவரை அழைத்துச் சென்றார்கள். சூரீராம் தrஸ் கோவிந்ததாஸ் என்ற வணிகரும் வந்திருந்தார். கொட்டு மேளத்துடன் விழா நடைபெற்றது. குறிப்பிட்ட இடத்தில் அஸ்திவாரம் பறித்து அங்கே பூஜை பண்ணி னார்கள். நவரத்தினத்தை இட்டார்கள். குறிப்பிட்ட முகூர்த்தத்தில் செங்கல்லை இவரும் பிறரும் எடுத்துக் கொடுக்க, ஸ்தபதி அவற்றை அஸ்திவாரத்தில் பதித்தார். "ரூபாய் தாருங்கள். இங்கே போடலாம்' என்று சொன்னார். அவரவர்கள் கால் ரூபாய், அரை ரூபாய். போட்டார்கள். ஒருவர் ஒரு ரூபாய் நோட்ட்ை எடுத்து நீட்டினார். திருப்பணிச் சபையைச் சேர்ந்த திரு.கருப்பையா, "இங்கே நோ ட் டு உதவாது. தா ன ய ந் தா ன் வேண்டும்” என்றார். அருகில் இருந்த இவர், "இங்கே என்ன? எங்கேயும் நாணயந்தான் வேண்டும். அதிலும், ஆலயத்தில் அவசியம் வேண்டும்” என்றார். (நாணயம்நேர்மை, காசு.)

சாயச்சுவர்.

ஈரோடு ரெயில்வே ஸ்டேஷனில் வண்டிக்காக இவர் காத்துக் கொண்டிருந்தார். இவ்ருடன் ஒரு புலவரும் இருந்தார். வண்டி வரச் சிறிது நேரம் இருந்தது. பெஞ்சு களிலெல்லாம் ஆட்கள் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். சுவரோரமாக உட்காரலாம் என்று போய் உட்கார்ந்தார். சுவருக்குப் புதிதாக வண்ணம் பூசியிருந்தார்கள். இவர் அதன்மேல் சாயப்போகிறாரே என்று அஞ்சிய உடனிருந்த புலவர், 'சுவரின்மேல் சாயா தீர்கள். வண்ணம் பூசியிருக்கி, றார்கள்” என்றார். -