பக்கம்:கி.வா.ஜ வின் சிலேடைகள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

亨洛 - கி.வா.ஜ.வின் சிலேடைகள்

கால்கட்டு

அவனுக்குப் பதினாறு வயது இருக்கும். காலில் காயம் பட்டுக் கட்டுப் போட்டுக் கொண்டிருந்தான். அந்தப் பையனுடைய வீட்டுக்குக் கி. வா. ஜ. போயிருந்தார். அவர் தந்தையைப் பார்த்து, 'என்ன, இப்போதே இவனுக்குக் கால்கட்டுப் போட்டு விட்டீர்களே!' என்று கேட்டார். (கால்கட்டு-கல்யாணம், காவில் போடும் கட்டு.)

ஒற்றைக் காது ஒரு பையனுடன் இவர் பேசிக் கொண்டிருந்தார். வேடிக்கையாகச் சில கேள்விகளைக் கேட்டார். இரண்டு காதும் இல்லாதவன் யார்?' என்றார். பையன், செவிடன்’ என்றான். 'ஒற்றைக் காதிருந்தால்...' என்று மறுபடி கேட்டார். பையன் சற்றே விழித்தான். இவர், ஊசி' என்றார். பையன் பின்னும் விஷயம் விளங் க்ாமல் விழித்தான். 'ஊசிக்கு ஒரு காதுதானே தம்பி?’ என்றபோது அவனுக்கு விளங்கியது. (காது-ஊசியில் து.ால் கோக்கும் இடம்.) .

மணிக்கட்டு

"தமிழ் மக்களின் தீர்க்க தரிசனத்தை என்னவென்று சொல்வேன்!” என்று நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த போது இவர் சொன்னார்.

- "எதை நினைத்து இப்படிச் சொல்கிறீர்கள்?"

"இதற்கு மணிக்கட்டு என்று பெயர் வைத்திருக்கி றார்களே. இங்கேதானே ரிஸ்ட்வாட்சைக் கட்டுகிறோம்? யாழ்ப்பாணத்தில் கடிகாரத்தை மணிக்கூடு என்று சொல் வார்கள். அதைக் கட்டுவதால் மணிக்கட்டு என்ற பெயர் இதற்குப் பொருத்தமாக இருக்கிறது." . . . . . . . . . . . .