பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104. . கி. வா. ஜ. பேசுகிறார்.

தால் அவள் எல்லாக் காலத்திலும் எல்லா இடத்திலும் நித்திய யெளவன சுந்தரியாக இருப்பவளென்று தோற்று கிறது. கங்கைக்கு, உனக்குப் பன்னிரண்டு கைகளுடன் பிள்ளை தோன்றுவன் என உரைத்தனன்; இதோ இந்தச் சுடிகை தந்தாள்' என்று கையினாலே சுட்டிக் காட்டுகிறாள். மீனாட்சிக்கும் சீவந்திணிக்கும் அவள் குறி சொன்னாளாம். அந்தக் குறத்தி சகலகலா வல்லியாகவும் இருக்கிறாள்; பல மொழிகளில் அவளுக்குப் பரிசயம் இருக்கிறது; ஒரு தெலுங்க மானினி நா செய் குடெனச் சொன்னாளாம். நாடி நற்குறி ஒதினேன்; இந்த நாசிகாபரணம் ஈந்தாள் என்று, அந்தப் பாஷையிலேயே சொல்கிறாள்.

மராட்டி, கன்னடம், உருதுப் பேச்சிலே அந்த அந்த த் தேசத்துப் பெண்கள் கேட்டார்களாம். அவள் குறி சொன் னாளாம். இங்கிலீஷ் பெண் ஒருத்திக்குக்கூடச் சொன்னா ளாம். அவள் சொல்வதைக் கேளுங்கள் :

ஒண்னு தல்பெறும் இங்கிலீஷ் மாது

ஒருத்தி லுக்மைஹாண் டென்றாள் ஒதி னேனவள் பாணி ரேகைகண்டு

உதவினாள் இந்த மேகலை. குறத்தி பிறகு சரபோஜி மன்னருக்குக் குறி சொல்லித் தான் பெற்ற வரிசையை அடுக்குகிறாள். மதனவல்லிக்கு உயிர் வருகிறது. 'அப்படியானால் என் கையையும் பார்த்துக் சொல்' என்று தன் கையை நீட்டுகிறாள்.

குறத்தி சும்மா சொல்லி விடுவாளா குறி? சாமிக்குப் பூசை போட வேண்டிய பண்டங்களெல்லாம் வாங்கிக் கொள்ளுகிறாள். எத்தனையோ வரிசைகளெல்லாம் பெற்ற அவளுக்குக் கஞ்சியும், அவள் பிள்ளை தலைக்கு எண்னெ யும் பஞ்சமாயிருக்கின்றன! .. : உள்ளபடி குறியுனக்குக் கூறிடுவே னம்மே-முன்னம்

ஒருசிறங்கைக் கஞ்சிபசி பாறிடவா ரம்மே