பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரபேந்திர பூபால குறவஞ்சி நாடகம் 103 .

அம்மே” என்கிறாள். அவர் பன்றியைக் கொல்ல வேடராகி வந்தாரல்லவா? அதனால் அண்ணன் உறவு கொண்டாடுகிறாள். கந்தன் மருமகனாம்! வள்ளி மகள் முறையாம்.

அவள் தனக்குத் தெரிந்த மலைகளின் வளத்தைப் பிறகு விவரிக்கிறாள். மேரு மலையிலே குடிசை தொடுத்தார் களாம்; யாரோ சாப மலை அது என்று சொன்னார்களாம். சாபம் என்பது வில்லுக்கும் பெயர்; சபித்தலுக்கும் பெயர். சிவபெருமானுக்கு வில்லான மலை மேரு என்ற அர்த்தத்தில் அவர்கள் சொன்னார்கள் குறவர்கள் தங்களுக்குச் சாபம் கிடைக்குமோ என்று பயந்து போனார்களாம். காளத்திக் குப் போனார்களாம். 'இந்த மலை ஒரு வேடன் கண்ணைப் பறித்த மலை" என்றார்களாம். அதையும் விட்டுவிட்டு வந்தார்களாம். .

இப்படி ஒவ்வொரு மலைக்கும் குற்றம் காட்டுகிறாள் அந்த வாயாடிக் குறத்தி. கடைசியில் தேரி மலையிலே வந்து குடி புகுந்தார்களாம். நேரிமலை சோழநாட்டுக்கு உரியது. புஸ்தகத்தில் இருக்கிறதே ஒழிய உலகத்தில் இருக்கிறதோ இல்லையோ சந்தேகந்தான். இது கவிஞன் கற்பனைதானே? சோழ அரசனுடைய ஸ்தானத்தில் இருந்த சரபோஜிக்கும் நேரியே மலை. எப்படியாவது பிரபந்த நாயகனுடைய செய்தியைக் கொண்டு வந்து சேர்க்க வேண்டும். -

பிறகு குறத்தி தான் கண்ட ஸ்தலங்களை யெல்லாம் சொல்கிறாள். நதிகளின் வளத்தை வருணிக்கிறாள். தேசங் களின் அழகைப் புகழ்கிறாள். கடைசியில் சோழ நாட்டின் வளத்தை விரிவாகச் சொல்கிறாள். ‘.

'நீ எங்கெங்கே போய் யார் யாருக்குக் குறி கொன் னாய்? என்ன என்ன சம்மானம் கிடைத்தது?" என்று

மதனவல்லி கேட்கிறாள். -

குறத்தி பதில் சொல்கிறாள். அந்தப் பதிவைப் பார்த்