பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I03 கி. வா. ஜ. பேசுகிறார்

சுையினில் காலில் கலந்திடு ரேகையும் மெய்யுறும் மறுவொடு விளங்கிடு தழும்பும் சுழிகளும் இன்னும் தோற்றுசில் குறிகளும் பார்த்துக் குறி சொல்வதில் தேர்ந்தவள்.

கூடை கட்டலைமுறங் கட்டலையோ வென்னக் குயில்கூ வுதல்போலக் கூவிக்கொண் டன்னப் பேடென்ன நடந்தெழில் மயிலென மின்ன பச்சை குத்தலையா அடியம்மே பச்சை பகற்குறி கேளுங்கள் சொல்கிறேன் பிச்சை இச்சகத் தனைவரும் கேட்பவர் இச்சை எனச்சர பேந்திரன் தனைப்போற்றி மெச்சிக்

குறவஞ்சி வருகிறாள்.

தன்னுயை காதலன் புகழைப் பாடிக்கொண்டு வரும் குறத்தியைப் பார்க்கிறாள் மதனவல்லி. அவளுடைய கைவீச்சும் அன்ன நடையும் பேச்சும் அவளைக் கவர் கின்றன. 'நீ யார்? என்ன சாதி? எந்தத் தேசம்? எந்த ஊர்?' என்று அவளைக் கேட்கிறாள். அவள் ஆரம்பித்து விடுகிறாள் தன்னுடைய ராமாயணத்தை.

"எங்கள் சாதி குறச் சாதி. எங்கள் பெருமை என்ன தெரியுமா? மாணினொடு பன்றிமறை யொளிவிருந்து கொல்வோம் வந்தெதிர்த்தோர் தங்களை மேல்மிஞ்சவிடோம் வெல்வோம் காணகத்தில் கிழங்கானை மருப்பதனால் கெல்வோம் கைக்குறிகள் மெய்க்குறிகள் எக்குறியும் சொல்வோம்.'

தங்கள் குலத் தொழிலைச் சொல்வி அதன்பெருமையை யும் சொல்கிறாள். செந்திருமால் அவளுக்கு மைத்துனனாம் வேடன்ாகிய குகனுக்கு அண்ணன் திருமாலாகிய ராமன். குகனுடைய வம்சம் அந்தக் குறத்தி. திருமால் மச்சினன்'

தானே? "திங்களனி சிவனெனக்குத் தமையன் முறை