பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரபேந்திர பூபால குறவஞ்சி நாடகம் ፪0 ?

காலத்தில் இருந்தாள். அவள் குறி சொல்வதில் தேர்ந்தவள்: தமிழிலும் புலமை நிரம்பியவள். . -

பிரபந்த மென்றால் அதற்கு ஒரு நாயகன் வேண்டும். சரபேந்திர பூபால குறவஞ்சி நாடகத்தில் சரபோஜி மகா ராஜாவே நாயகன். 18-ஆம் நூற்றாண்டின் இறுதியில் தஞ்சாவூரில் மகாராஷ்டிர அரசர் பரம்பரையில் ஒருவராக அரசாண்டவர் சரபோஜி. அவருடைய ஆஸ்தான வித்து வானாக விளங்கிய கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிக ரென்னும் தமிழ்ப் புலவர் இந்த நாடகத்தை இயற்றினார்.

கதா நாயகனாகிய சரபேந்திர மன்னர் பவனி வருகிறார். ஒரிடத்தில் நாயகியாகிய மதனவல்வி பந்து விளையாடிக் கொண்டிருக்கிறாள். அவள் சரபோஜி மன்ன ரைக் கண்டு மயல் கொள்ளுகிறாள். மயல் அதிகமாகிறது. தூக்கம் இல்லை; சந்திரன் தகிக்கிறான். தென்றல் வருத்து கிறது. அவள் துடி துடிக்கிறாள்.

அப்போது அவளுடைய சகி வருகிறாள். அவளைச் சரபோஜி மகாராஜாவிடத்தில் தூது போகச் சொல்வி அனுப்பிவிட்டு, இன்னும் அவள் வரவில்லையே!” என்று நாயகி எதிர்பார்க்கிறாள். அந்தச் சமயத்தில் ஒரு குறத்தி ஜாம்ஜாமென்று வருகிறாள்.

குன்றிமா மணியும் குலச்சங்கு மணியும் துன்றிடு கவடியும் தொகுத்திடு பணிகளும் - புலிப்பல் தாலியும் புனைந்துமாத் திரைக்கோல் வலக்கையி லேந்தி மணிக்குறக் கூடை * , மருங்கினில் இடுக்கி . ... . . - வருகிறாள். வரும்போதே சரபோஜி மன்னருடைய புகழைப் பாடிக்கொண்டு வருகிறாள். அவள் பெண்களுக்கு, -

கி-7 .