பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 00 கி. வா. ஜ. பேசுகிறார்.

அப்படிப் பிறந்த உருவங்களே பிரபந்தங்கள். தொண் லூற்றாறுவகைப் பிரபந்தங்களென்று ஒரு கணக்கை முன்பு. சொல்வி வந்தார்கள். புலவர்களின் கற்பனைக்கு வரம்பு ஏது? நூற்றுக்கு மேம்பட்ட வகைகளை இப்போது பார்க்க லாம். குறவஞ்சி என்பது அந்தக் கணக்கைக் கடந்து: ஆண்டான பிரபந்தங்களுள் ஒன்று.

மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட முடியுமா?' என்று பழமொழி சொல்வார்கள். கவிஞர்கள் அந்தக் காரியத்தைச் செய்துவிடுகிறார்கள். ஒரு புலவருக்குப் புகையிலையின்மேலே விருப்பம் அதிகம். பழனியாண்டவரிடத்தில் அவருக்கு அளவிறந்த பக்தி. புகையிலையையும் பழனியாண்டவரையும் புலவர் சேர்த்து விட்டார்; ஆண்டவரிடத்தில் காதல் கொண்ட மங்கை, ஒருத்தி, புகையிலையை அவரிடத்தில் தூதுபோய் வரும்படி ,ெ ல்வதாக ஒரு பிரபந்தத்தை இயற்றினார்."புகையிலை விடு தூது" என்பது அதன் பெயர். புகையிலையை இன்':த்து பிறகு பழனியாண்டவரையும் புகழ்கிறார். அந்தச் சிறு நூலில் :

. புகையிலைக்கே பொருத்தம் இருக்கிறதென்றால் குறத். இக்கர் இடமில்லை? குறவஞ்சி யென்பதற்குக் குறப் பெண் என்று பொருள். குறத்தியைப் பற்றிய செய்திகளை முக்கிய மாக வைத்துப் பாடுவதனால் குறவஞ்சி யென்ற பெயர் இத்தகைய நூல்களுக்கு வந்தது. கதாபாத்திரங்கள் பேசும். தோரணையில் நூல் அமைந்திருப்பதால் இது நாடகப் பிரபந்தம். ஆதலால் குறவஞ்சி நாடகம் என்று சொல்லு: கிறார்கள். х - -

இந்தக் காலத்தில் குறத்தி கூடை முறம் கட்டுவதும்,. ஊசி விற்கிறதுந்தான் நமக்கு ஞாபகத்துக்கு வருகின்றன. அந்தக் காலத்தில் குறத்தி குறி சொல்வதில் பேர் போனவள். குறமகள் குறி எயினி என்ற ஒரு பெண் சங்க