பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரபேந்திர பூபால குறவஞ்சி நாடகம் . 99

அந்த மூன்று பண்டங்களைக்கொண்டு எத்தனை உருவம், எத்தனை பெயர், எத்தனை வகையான ருசிகளை ஹோட்டல்காரர்கள் உண்டு பண்ணுகிறார்கள்! நாமும் சலிக்காமல் அதே சர்க்கரையையும் அதே நெய்யையும் அதே மாவையும் வேறு வேறு உருவத்திலே வாங்கி உண்டு ஏப்பம் விடுகிறோம்.

இந்த மிட்டாய்ச் சரக்கிலே ருசியொன்றுதான் கணக்கு என்பது இல்லை. அதன் உருவங்கூட நமக்குக் கவர்ச்சியைத் தருகிறது. உருவ பேதங்கள் அதிகமாக ஆக நம்முடைய ஆசையும் அதிகமாகிறது. நமக்குச் சலிப்பே உண்டாவ தில்லை என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். - ...

உருவ பேதங்களைச் சிருஷ்டிப்பது கலையின் முக்கிய மான தந்திரம். கதையும் அப்படித்தான். -

ஒரு மனிதன் நல்ல கொடையாளி. அவனை நாம் புகழ வேண்டும். 'அவன் நல்ல கொடையாளி' என்று சொல்ல. லாம். ஆனால் அது வெள்ளைச் சொல்; உண்மையை உள்ள படியே சொல்வது. அதையே மாற்றி, "அவன் கர்ணன்: என்றால் அதற்கு ஒரளவு நிறம் ஏறுகிறது; கர்ணனுக்குப் பிறகு இவன்தான்' என்று சொன்னால் அந்த ரஸம் சிறிது அதிகமாகிறது. 'அவனை அண்டினவர்கள் பிறகு யாரிடமும் கை நீட்டுவதே இல்லை', 'அவனிடம் போனவர்கள் ஆயிரம் பேருக்குத் தர்மம் செய்கிறார்கள்’’-இப்படியாக இந்த ருசியை ஏற்றிக்கொண்டே போகலாம். இந்த வித்தை யைத் தான் புலவர்கள் செய்கிறார்கள். ...' .

கடவுளையோ மனிதர்களையோ புகழ வேண்டு. மேன்றால், அந்தப் புகழுக்கு எவ்வளவோ உருவங்களை உண்டாக்கி யிருக்கிறார்கள். பாட்டிலே பலவகை, அலங் காரங்கள், பிரபந்தங்கள், காவியங்கள் எல்லாம் அந்த உருவங்களின் பலவேறு அளவுடைய வகைகளே.