பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

、岛 கி. வா. ஜ. பேசுகிறார்

-ணத்தை, வண்டி உருளை மாதிரி காதிலே மாட்டிக்கொண் டிருக்கிறாயே, அது என்ன?’ என்று கேட்பான். அவள் அவனுடைய பேதைமையை நினைத்துச் சிரித்துக்கொண்டே அவை இன்ன இன்ன நகையென்று சொல்லி விளக்குவாள். பிறகு இருவரும் தங்கள் இருப்பிடத்திற்குப் போய் விடுவார்கள்.

இப்படி அமைந்த நாடோடிப் பாடல்களைப் பார்த்துக் கொண்டு புலவர்கள் தங்களுக்கு விருப்பமான தெய்வத் தையோ அரசனையோ பிரபுவையோ நாயகனாக வைத்துக் குறத்தி குறி சொல்லுவதாகக் குறவஞ்சிகளைப் பாடியிருக் கிறார்கள். குறத்தி முதல்தரமான நாடோடி; அவள் பாட்டோ முதல்தரமான நாடோடிப் பாட்டு. அதில் உள்ள சுவை புலவர்கள் உள்ளத்தைப் பிணித்தது என்பதற்கு அதை அடியொற்றி அவர்கள் இயற்றிய குறவஞ்சிகளே சாட்சி யாகும். -

சரபேந்திர பூபால குறவஞ்சி நாடகம்

சாயங்காலம் நாலுமணி ஆகிவிட்டது ஒரு பெரிய ஹோட்டலுக்குப் போகிறோம். பையனைக் கூப்பிட்டு: 'என்னப்பா இருக்கிறது?" என்று கேட்கிறோம். அவன்

சடசடவென்று அடுக்குகிறான். "ஜிலேபி, மைசூர்ப்பாகு, பாதாம் ஹல்வா, பாஸந்தி, மலையகாஜா, பாதுஷா, மஹ்மல்பூரி.........." இரண்டு நிமிஷம் இப்படி அவன் சொல்லி முடிக்கிறான். அவன் சொல்லும் இனிப்புப்பண்டங் .கள் அவ்வளவையும் சர்க்கரை, தெய், மா என்று மூன்று தத்துவங்களாகப் பிரித்து அமைத்து விடலாம். -