பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறி சொல்லுதல் g?”

குறத்தி மறைகிறாள்; அடுத்த கணத்திலே அர்ச்சுனன் வருகிறான். கதை மங்களமாக முடிகிறது.

மின்னொளியாள் குறம் என்ற நாடோடிக் கதைப் பாட் டிலே இந்தக் காட்சிகளையெல்லாம் காணலாம். இப்படியே. வேறு சில குறங்களும் உண்டு. - கடவுள் சம்பந்தமோ நமக்குத் தெரிந்த மனிதர் சம்பந் தமோ இல்ல்ாமல் நாடோடிப் பாடல்களில் ஒரு குறவஞ்சி. இருக்கிறது. குறத்தி குறி சொல்லிவிட்டு வரும்பொழுது. அவளுடைய நாயகனாகிய சிங்கன் தன் கையாள் ஒருவ னோடு வேட்டையாடிக் கொண்டிருப்பான். திடீரென்று. குறத்தியின் ஞாபகம் அவனுக்கு வந்து விடும். அவளைக் காணாமல் தவியாய்த் தவிப்பான். வேட்டையை விட்டு. விட்டு அவளைத் தேடிக் கண்டுபிடித்துத் தன்னுடைய ஆவலைக் காட்டிப் பேசுவான். அவளிடம் காணப்பட்ட மாறுபாடுகளைக் கண்டு சந்தேகம் உண்டாகிக் கேள்வி: கேட்பான். அவள் உசிதமாகப் பதில் உரைப்பாள்.

அள்ளி முடிக்குங்கூந்தல் அறுபத்து மூணு பாகம் அவிழ்ந்த வயணமென்னடி-வங்கணச் சிங்கி கோபுர வாசலிலே குனிந்து நடக்கும்போது குரங்கு கலைத்ததடா-வங்கணச் சிங்கா மூக்கிலே நான் இட்ட முந்நூறு பொன்பெற்ற முக்குத் தளுக்கெங்கe-வங்கணச் சிங்கி மொந்தையிற் கள்ளை நான் மொண்டு குடிக்கும்போது முன்கையில் பட்டதடா வங்கணச் சிங்கா. இந்தமாதிரி வாக்குவாதம் நடந்த பிறகு அவன் எங். கெங்கே போயிருந்தாள் என்பதைக் குறவன் தெரிந்துகொள் வான். அவள் சம்மானமாகப் பெற்று அணிந்த ஆபரணங். கள் முதலியவற்றை அவன் பார்ப்பான். அவனுக்கு அவை இன்ன பொருளென்று புரியாது. அராக்கொடி பாம்புபோல. இருக்கும். அது என்ன என்று கேட்பான். காதிலுள்ள ஆபர