பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:396 கி. வா. ஜ. பேசுகிறார்

அவள் ஆவேசம் வந்தவளைப்போல் உடம்பெல்லாம் சிலிர்த்துக் கொள்கிறாள். -

தெய்வங்களை நினைத்தாலே சிலிர்த்துக்கொள்ளு துடம்பு தேகமெல்லாம் மயிர்க்கூச்சல் இடுகிறதே பெண்ணே வாடைமணம் வீசுதிங்கே மயிலவர்வந் தாப்போல் மயக்குகின்ற தென்னுடம்பைச் சன்னதங்கொண்டதுபோல்.

சாrாத் முருகக் கடவுனே வந்து விட்டதைப்போல இருக்கிறதாம். குறவர்களுடைய குலதெய்வம் மயிலவர் ..அல்லவா?

கூடைகொண்டு கவியுதடி கோமளமே பெண்ணே கோலவிழி துடிக்கிறதே குறிசொல்வேன் கேளு. இவ்வளவு பீடிகையுடன் அவள் குறி சொல்லத் தொடங்குகிறாள். மின்னொளியாளுடைய கைக்குறி மெய்க் குறி முதலியவற்றைப் பார்த்து, அர்ச்சுனன் விரைவிலே வந்துவிடுவான் என்று சொல்லுகிறாள். மனமகிழக் கணவனிப்போ வருவாண்டி பெண்ணே வாள்விசையன் மேலாசை தோணுதடி உனக்கு தயவுள்ள புருஷனிப்போ வருவாண்டி பெண்ணே வரவேணும் பார்த்தனிப்போ வள்ளியம்மை யருளால் இன்னமரை நாழிகையில் அர்ச்கன மகா ராசன்

வண்ணமுடன் இக்கோயில் வரப்போகிறான் பெண்ணே கொச்சைக் குறித்தியிட குறிகளும்பொய் யாது - கொச்சியம்மை ஆணையென்று கூடையின்மேல் அடித்தாள். அவள் அவ்வளவு நிச்சயமாகச் சொல்லி வற்புறுத்துவ தற்குக் கைக்குறியும் பார்க்க வேண்டாம்;செவுளி சொல்லும் பார்க்க வேண்டாம். ரகசியம் என்னவென்றால், மின்னொளி யாள் நிலைமையைச் சோதிப்பதற்காக அர்ச்சுனனே குறத்தி வேஷம் போட்டுக்கொண்டு குறத்தி மாதிரியே பாடிக் கொண்டு வந்திருக்கிறான். . . . .