பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 10 கி. வா. ஜ. பேசுகிறார்

என்று சொல்லிவிட்டார். அகக்கண்ணைத் திறந்து வைக்கும் தெய்வம் அவன்தானே? தெய்வம் என்று சாமான்ய மனித னைக் கண்டால் நமக்கு மதிக்கத் தோன்றுகிறதா? ஊரார் எல்லோரும் ஒரு மனிதனை அப்படி மதிக்க வேண்டுமானால் அதற்கு ஏற்ற காரணம் இருக்க வேண்டும். அந்த மனித னிடத்தில் அதற்கு ஏற்ற குணங்களும் ஆற்றலும் இருந்தால் தான் ஜனங்களுடைய மதிப்பு நிரந்தரமாக இருக்கும். இல்லாவிட்டால் வெறும் சம்பிரதாயத்துக்காக உபாத்தியா ருக்குப் பூசை செய்யும் நிலைதான் வரும்.

வாத்தியார் ஐயா எப்படி இருந்தார்? எப்படி இருந்தால் வாத்தியார் ஐயா என்ற பட்டம் கொடுக்கலாம்? அவர் குணம், பழக்க வழக்கங்கள், கல்வி, சொல்லிக் கொடுக்கும் முறை முதலியவைகளின் இயல்பு என்ன?-இந்த விஷயங். களைத் தமிழர்கள் ஆராய்ந்திருக்கிறார்கள். அநேகமாக இலக்கண நூல் ஒவ்வொன்றிலும் ஆரம்பத்தில் இந்த விஷயங்களைத் தெரிவிக்கிறார்கள். இ லக் க ண த் தி ல் பொதுப்பாயிரம் என்ற ஒரு பகுதி வருகிறது. அங்கே புஸ்தகம் எப்படிப் இருக்க வேண்டும், அதைச் சொல்லிக் கொடுக்கும் வாத்தியார் ஐயா எப்படி இருக்க வேண்டும், அவர் எப்படிப் பாடம் சொல்ல வேண்டும், மாணாக்கன் எப்படி இருக்கவேண்டும், எப்படிப் படிக்க வேண்டும் என்ற விஷயங்கள் வருகின்றன. இவற்றைப் பற்றிய விரிவான இலக்கணங்களைச் சொல்லும் சூத்திரங்களைப் பழைய நூல்களிலிருந்து உரையாசிரியர்கள் எடுத்துக் காட்டுகிறார் கள். அவற்றைக் கொண்டு, வாத்தியார் ஐயாவைப் பற்றித் தெரிந்துகொள்ளக்கூடிய விஷயங்களை இனிப் பார்க்கலாம்,

2

வாத்தியார் முதலில்நல்ல மனிதராக இருக்க வேண் டும். நற்குண நற்செய்திகள் உடையவராக இருந்தால்தான் பொது ஜனங்களுடைய மதிப்புக்குப் பாத்திரராக முடியும்.