பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாத்தியார் ஐயா 11 f"

'நான் சொல்வதை மாத்திரம் கேள்; நான் செய்வதைக் கவனிக்காதே’ என்றால் வாத்தியார் ஐயாவை ஒரு. வாரத்தில் ஊரார் அவமானப்படுத்தி அனுப்பி விடுவார்கள். நல்ல ஒழுக்கமும் நல்ல பழக்கங்களும் இருப்பதற்கு, அவர் நல்ல மனிதர்களுடைய குடும்பத்தில் பிறந்திருக்க வேண்டும்; இல்லாவிட்டால் நல்ல குருவினுடைய பழக்கத்தை உடையவ: ராக இருக்க வேண்டும். இவ்வளவும் சேர்ந்த ஒரு தகுதியை.. குலன்' என்று ஆசிரியர்கள் குறிக்கிறார்கள்.

ஆ சி ரிய ைரத் தெய்வமாகக் கருத வேண்டு மென்று. சொன்னார்களே, அதற்கு ஏற்றவாறு ஆசிரியருக்கும் தெய்வத்தின் குணம் இருக்க வேண்டும் அல்லவா? தெய்வத் துக்கு என்ன என்னவோ விசேஷ குணங்கள் இருப்பதாகவேத சாஸ்திரங்கள் சொல்லுகின்றன. பக்தர்களுக்கு அவற்றைப் பற்றிக் கவலை யில்லை. கடவுள் நம்முடைய பிரார்த்தனைக்கு இரங்கி அருள்புரிய வேண்டுமென்ற ஒன்று. தான் அவர்களுடைய நோக்கம். அருள் என்னும் குணம் இருப்பதனால்தான் தெய்வத்தை நாம் கொண்டாடு கிறோம்; சிற்றுயிர்க்கு இரங்கும் பேரருளாளன் என்று பாராட்டுகிறோம். குருவுக்குத் தெய்வத்தைப் போன்ற மதிப்பு வேண்டுமானால் அவரிடமும் அருள் இருக்க வேண் டும். பிறருக்கு உபகாரம் செய்ய வேண்டுமென்ற நினைவு. அருளிலிருந்து பிறப்பதே. அறியாமை நிரம்பிய உலகத்தில் உள்ளவர்கள்பால் இரக்கம் பூண்டு, அறிவு ஊட்டும் சிறந்த தொண்டை ஆசிரியர் மேற்கொள்ள வேண்டும். அறியாமை யால் செய்யும் பிழைகளைப் பொறுக்கும் இயல்புக்கும் அவ்வருளே காரணமாக நிற்கும்.

குலமும் அருளும் ஒருங்கு இயைந்த குருவுக்குத் தெய்வ பக்தியும் அவசியமானது. கல்வியின் பயனே கடவுளை அறி தல் என்ற கொள்கையில் ஊறிய இந்நாட்டில் கடவுளை நினைத்தே கல்வியைத் தொடங்குகிறார்கள். மாணாக்கர்