பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 கி. வா. ஜ. பேசுகிறார்

களுக்குக் கல்வி புகட்டி அவர்களுடைய வாழ்நாள் நற்பயன் பெறும்படி செய்யும் வழியை உபதேசிக்கும் ஆசிரியர் தெய்வ நம்பிக்கை உ ைடய வராக இருந்தால்தான்

மாணாக்கர்களிடத்திலும் அது வளரும்.

குரு பெருந்தன்மை யுடையவராக இருக்க வேண்டும். சிறிய விஷயத்தைப் பெரிதாக்கி வீண் சச்சரவுகளுக்கு இடம் கொடுக்கக் கூடாது. வாழ்க்கை முழுவதும் பயன்படும் சாதனைகளை மாணாக்கர்களுக்குப் பயிற்றும் மாபெருந் த்ொண்டில் ஈடுபட்டவர் உபாத்தியாயர். அவர் சில்லறை விஷயங்களில் கவனத்தைச் செலுத்தினால் அவருடைய குறிக்கோள் சிதறிவிடும்; திண்மை கலங்கும். இந்தப் பெருந் தன்மையை மேன்மை' என்று இலக்கணக்காரர்கள் குறிக்கிறார்கள்.

குலமும், அருளும், தெய்வக்கொள்கையும், மேன்மை யும் ஆகிய உயர் குணங்கள் ஆசிரியர்பால் இருக்க வேண்டு மென்று சொல்லுவதன் மூலமாக இலக்கண நூல்கள், அவர் மனிதருட் சிறந்தவராக இருக்க வேண்டும் என்பதையே வற்புறுத்துகின்றன.

3 வாத்தியார் ஐயா மனிதருட் சிறந்தவராக இருக்கிறார் போதுமா? அவர் நன்றாகப் படித்திருக்க வேண்டும். பல நூல்களை வெறுமனே கணக்குப் பண்ணிப் படித்திருந்தால் மட்டும் போதாது. படித்ததைத் தெளிவாகத் தெரிந்து கொண்டிருக்க வேண்டும். தெளிவு இல்லாமல் அவருக்கே சந்தேகம் இருந்தால் அவரிடம் படிக்கும் மாணாக்கர்கள் உருப்படுவது எப்படி? ஆகவே அவர் கலைகள் பயின்றிருக்க வேண்டும்; பரிகை கொடுத்துப் பட்டம் பெற்றிருந்தால் இந்தக் காலத்துக்குப் போதுமானது. அந்தக் காலத்தில் இதெல்லாம் பலிக்காது; படித்ததைச் சந்தேக விபரீதமின்றிப் :படித்திருக்க வேண்டும். -