பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாத்தியார் ஐயா A 15

வந்த காலமும் உண்டென்பது நமக்குத் தெரியுமே பயப்படு வதற்குரிய பொருளாக ஆசிரியர் இருக்கக் கூடாது.

நிலத்தைப் பொறுமைக்கு உபமானமாகச் சொல்வ தோடு, பெருமைக்கும், தின்மைக்குங்கூட உவமையாக எடுத்தாளுவார்கள். நிலத்தினும் பெரி தே' என்று பெருமைக்கு அதைச் சொல்வதை இலக்கியங்களிலே காண லாம். ஆசிரியர் பெருமையில் நிலத்தைப்போல இருக்க வேண்டும். பெருமை என்பது அவருடைய குணப் பெருமை யையும் கல்விப் பெருமையையும் குறிக்கும்.

அடுத்தபடி நிலத்திற்குரிய சிறப்பியல்பு திண்ம்ை. 'மண் கடின மாய்த்தரிக்கும்” என்று சாஸ்திரம் சொல்கின்றது. மனத் திண்மை ஆசிரியரிடம் இருக்க வேண்டும். எந்த விஷயத்தையும் சந்தேகமின்றி உறுதியாகத் தெரிந்து கொண்டிருக்க வேண்டும். எத்தகைய கேள்வி வந்தாலும் மாறாத திண்மை இருந்தால்தான் எக்காலத்தும் மானாக் கர்களுடைய அறிவை வளர்க்க உபயோகமாக இருக்கும்.

நிலமானது பருவத்துக்கு ஏற்றபடியும் வேளாளர்கள் எவ்வளவுக்கு எவ்வளவு உழுது எருவிட்டுச் சிரமப்பட்டுப் பயிரிடுகிறார்களோ அதற்கு ஏற்றபடியும் பயன்கொடுக்கும், கையைக் கட்டிக்கொண்டு வீட்டில் உட்கார்ந்திருந்தால் நிலம் வளம் சுரக்காது. நினைத்தபொழுதெல்லாம் விளைச் சலையும் தராது. பயிர்வினையப் பருவம் உண்டு; முயற்சியும் அவசியம்.

வாத்தியார் ஐயா நிலம்; மாணாக்கன் உழவன். மாணாக்கனுடைய பருவத்துக்கு ஏற்றபடி வாத்தியார் ஐயா சொல்லித் தர வேண்டும். தமக்குத் தெரிந்த சமாசாரங் களை யெல்லாம் பையனுடைய மூளையில் ஏற்றிவிட வேண்டுமென்ற பெருங் கருணை வியர்த்தமாகிவிடும். யார் யார் எந்த எந்தப் படியில் இருக்கிறார்கள் என்பதை நன்றாகத் தெரிந்துகொண்டு அவர்களுடைய பக்குவத்துக்கு