பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

... I 14 கி. வா. ஜ. பேசுகிறார்

இன்ன இன்ன பொருளைப்போல இருக்க வேண்டும் என்று வேறு சொல்வி யிருக்கிறார்கள். மிகவும் விரிவாகவும் நுணுக் கமாகவும் சொல்ல வேண்டியதைச் சுருக்கமாகச் சொல்வ தற்கு, உபமானம் ஒரு நல்ல வழி. உபமானத்தை மனம் போன மட்டும் விரித்துப் பார்த்துக் கொள்ளலாம். வேதாந் தத்தில் வரும் உபமானங்களுக்கு கணக்கு வழக்கு உண்டா? இந்தத் தந்திரத்தை வேதகாலத்து ரிஷிகளும் தெரிந்து கொண்டிருக்கிறார்கள்; ஏசுகிறிஸ்துவும் தெரிந்திருக்கிறார்; ராமகிருஷ்ண பரம ஹம்ஸ்ரோ உபமானக் கதைகள் சொல்லி விளங்காதவற்றையெல்லாம் விளங்க வைத்து விடுகிறார். வாத்தியார் ஐயாவை எந்த எந்தப் பொருளுக்குச் சம மாகச் சொல்கிறார்கள் என்பதை இனிமேல் கவனிப்போம்.

4.

'வாத்தியார் ஜயா பூமி தேவியைப்போல் இருக்க வேண்டும்; மலையைப்போல் இருக்க வேண்டும்; தராசைப் போலவும் மலரைப் போலவும் இருக்க வேண்டும்” என்று பழைய தமிழர்கள் சொல்லி யிருக்கிறார்கள்.

பூமிதேவியை உபமானம் சொல்லும்போது நமக்கு ஒரு விஷயம் நிச்சயமாக ஞாபகத்துக்கு வந்துவிடுகிறது. பொறு மைக்குப் பூமி தேவியைச் சொல்லிச் சொல்வி அலுத்துப் போயிருக்கிறோமே!

படிக்கும் பிள்ளைகள் அறிவு பெறுவதற்காக ஆசிரியரை அணுகுகிறார்கள். பிழை செய்வது அவர்களுக்கு இயல்பு. அதை மாற்றித் திருத்தமாக இருப்பதையே இயல்பாகப் பண்ணும் பொறுப்பைத்தான் வாத்தியார் ஏற்றுக்கொண் டிருக்கிறார். ஆகையால் மாணாக்கர்களிடம் சிடுசிடுவென்று விழுந்தால் அவர்கள், வாத்தியார் என்றால் காட்டு மிருகம்’ என்று நினைத்து விடுவார்கள். தமிழ் நாட்டில் வாத்தியா ருடைய பேரைப் பூச்சாண்டியாகச் சொல்லிப் பயமுறுத்தி