பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 கி. வா. ஜ. பேசுகிறார்

பொறாமை கொள்ளும் பேர்வழியாக இருக்கக் கூடாது. பையனே ஆசிரியரைவிடச் சில சமயங்களில் அறிவுத்திறன் உடையவனாக இருக்கும்படி நேர்ந்து விட்டால் பொறா மைக்குணமுள்ள ஆசிரியர் சும்மா இருப்பாரா? ஆபத்து வந்துவிடும். அது மட்டும் அல்ல. உலகத்தில் எத்தனையோ ஆசிரியர்கள் இருக்கிறார்கள். எல்லோரும் ஒரே மாதிரியான வர்கள் அல்ல. ஏற்றத்தாழ்வு இருப்பது இயல்பு, தம்மை விடக் கல்வியறிவிலோ, பொருள் நிலையிலோ உயர்வை புடைய ஆசிரியர் ஒருவர் பக்கத்தில் வாழ்பவராகவோ, அடுத்த வீட்டுப் பையனுக்குச் சொல்லிக் கொடுப்பவ வராகவோ இருந்துவிட்டால் பொறாமைக்கார வாத்தியார் ஐயா என்ன செய்வார், தெரியுமா? தினந்தோறும் அவரைப் பற்றிக் குறை கூறுவார்; பாடம் பாதி நேரம் நடந்தால், அவனுக்கு என்ன தெரியும்? சுத்த முட்டாள். அவனிடம் வாசிக்கிறவன் உருப்பட்டாற்போலத்தான்! என்ற பாடம் பாதி நேரத்தைக் கபளிகரித்துவிடும். பையன் படிப்பு கெட்டுப்போவதோடுகூட, வாத்தியார் ஐயா சொன்ன சமாசாரங்களைப் பலர் காதில் விழும்படி செய்யும் ஊக்கம் அவனுக்கு உண்டாகிவிடும். அதன் பயன் வீண் கலகமும் மனஸ்தாபமுமே.

வாத்தியாருக்குப் பேராசை கூடாது. மாணாக்கன் பேரிய செல்வனாக இருக்கலாம். அவன் வாத்தியார் ஐயா விடம் தானாக மதிப்பு வைத்து எது வேண்டுமானாலும் தரலாம். அவன் கொடுப்பதைப் பெறுவதுதான் நல்லது. அவன் சொத்திலே தமக்கும் ஒரு பங்கு உண்டென்று உரிமை பாராட்டுபவரைப் போலச் சில ஆசிரியர்கள் பேசுவார்கள். 'எனக்கு நூறு ரூபாய் தரக்கூடாதோ இவனுக்குப் பணமா இல்லை? கொடுத்தால் குறைந்துவிடுமோ? நான் வாங்கிக் கொள்ளத் தகாதவனா?" என்று கேட்பார்கள். அவன் பணக்காரனாக இருப்பதற்கு வாத்தியார் ஐ யாவா