பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 கி. வா. ஜ. பேசுகிறார்

தினவர் ஆகிறார். அறிவுப் பலமும், ஒழுக்க உயர்வும் உடையவர்கள் அச்சம் உண்டாகும்படி வார்த்தையாட மாட்டார்கள்.

6

முன் நல்ல ஆசிரியர்களுக்கு வேண்டுமென்று மொழிந்த குணங்கள் இல்லாமையும், இழிந்த குணத்தோடுகூடிய இயல் பும், பொறாமையும், பேராசையும், அச்சமுண்டாகப் பேசு வதும் கெட்ட வாத்தியாருடைய லட்சணமென்று சொன்ன இலக்கண நூலாசிரியர்கள், மேலும் அவரைக் கழற்குடம் மடற்பனை, பருத்திக் குண்டிகை, முடத்தெங்கு என்று வைகிறார்கள். 'நாயே, பேயே, கழுதையே’’ என்று. ஒருவனை அவன் குணங்களுக்கு ஏற்ற உபமானங்களால் நாம் அழைக்கும்போது, ஆகா, என்ன அழகான உவமை! என்றா கேட்பவர்கள் நினைக்கிறார்கள்? அதை வசவென்று. உலக சம்பிரதாயத்தில் சொல்கிறோம். அந்த மாதிரியே. உபமானமென்ற உருவத்தில் மேலே சொன்ன கழற்குடம் முதலிய வார்த்தைகளால் கெட்ட வாத்தியாரைப் பெரிய சொல்கிறார்கள். வசவென்று சொன்னாலும் ஒன்று தான்; உபமானம் என்று சொன்னாலும் ஒன்றுதான். ஏன் அப்படிச் சொன்னார்கள் என்பதைக் கவனிக்கலாம்.

பழைய காலத்தில் எந்தப் பொருள்களையேனும் கணக் குப் பண்ண வேண்டுமானால் கழற்சிக் காயை வைத்துக் கொண்டு எண்ணுவது ஒரு வழக்கம். ஒவ்வொன்றாக எண்ணும்போது ஒவ்வொரு கழற்சிக் காயை ஒரு குடத் திற்குள் போடுவார்கள். இப்படிப் போட்ட கழற்சிக் காய், களைக் கடைசியில் எடுத்து எண்ணுவார்கள்.

-அழற்சிக் காய்களில் எல்லாம் ஒரே அளவாக இருப்ப தில்லை. சின்னதும் இருக்கும், பெரியதும் இருக்கும். நல்ல உருண்டையாகச் சில இருக்கும்; சில ஒழுங்கற்ற உருவத்