பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

J贺盛3 கி. வா. ஜ. பேசுகிறார்

இன்னும் சில வாத்தியார்கள் உண்டு. நன்றாகப் படித் திருப்பார்கள். ஆனால் அவரிடமுள்ள கல்வியை லேசில் நாம் பெற முடியாது. அவர்களிடம் நடையாய் நடந்து அவர் களுடைய கோபதாபங்களுக்கு உட்பட்டுக் கற்றுக்கொள்ள வேண்டும். அவர்களாக மனம் வந்து சொல்லிக்கொடுத்தால் ஏதாவது தெரிந்து கொள்ளலாம். மாணாக்கன் சொந்த முயற்சியினாலும் பத்தியினாலும் அவர்கள் உள்ளத்தைக் கனிவிக்க இயலாது. இந்த இனத்தாரை இலக்கணக்காரர் கள் பனை மரம் என்று சொல்கிறார்கள். -

மடல் அடர்ந்து நிற்கும் பனை மரத்தில் பன நுங்கோ பழமோ இருக்கிறது. விடுவிடுவென்று ஏறினோம், பறித் தோம், தின்றோம் என்பதற்கு இல்லையே! எவ்வளவு கஷ்டப்பட்டு உடம்பிலே காயத்தை ஏற்றுக்கொண்டு கர்யைப் பறிக்க வேண்டும்! இல்லாவிட்டால் பணம் பழம் தானே விழும் வரைக்கும் காத்திருக்க வேண்டியதுதான். பனைமர வாத்தியாரால் மாணாக்கர்களுக்கு என்ன பிரயோஜனம் இருக்கப் போகிறது?

தானே தரக்கொளின் அல்லது தன்பால் மேவிக் கொளக்கொளா இடத்தது மடற்பனை.

பருத்திக் குடுக்கை வாத்தியாரென்று ஒரு ஜாதியை இலக்கண நூலில் காணலாம். பழைய காலத்தில் சிக்கிமுக் கிக்கல்லால் நெருப்பு உண்டாக்கி வந்தார்கள் சிக்கிமுக்கிக் கல்லை உராயும்போது நெருப்புப் பொறி உண்டாகும். அதைப் பருத்தியிலே பற்றச் செய்து அதிலிருந்து தேங்காய் தார், உமி முதலியவைகளில் பற்ற வைப்பது வழக்கம். இந்தக் காரியத்துக்காக ஒரு குடுக்கையில் பருத்தியை அடைத்து வைத்திருப்பார்கள், அதிலிருந்து கொஞ்சங் கொஞ்சமாக அவ்வப்போது பஞ்சை எடுத்து உபயோகிப் .பார்கள். - *