பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறநானூறும் சரித்திரமும் ፲88.

லும்போது மனம் கோணாமல் நடுநிலையில் நின்று வித்தி யாசமாகிய தொண்டைச் செய்து வாழ்வார்.

இந்த மாதிரியான வாத்தியார் ஐயா இன்று தமிழ் நாட்டில் இருந்தால்,-அதைப்பற்றி இப்போது நினைத்து என்ன பிரயோசனம்! பழைய காலத்தில்தான் இப்படி இருந் தார்களென்பது என்ன நிச்சயம்? இருந்தார்களோ, இல்லையோ, வாத்தியார் ஐயா இன்னபடி இருக்க வேண்டும் என்று ஒரு திட்டம் வகுத்திருக்கிறார்கள்: அவ்வாறு நடக்க முயன்றும் இருப்பார்கள். அந்தத் திட்டத்தின் உயர்வையும் அதை அமைத்துக் கொண்டவர்களின் வாழ் க் கை லட்சியத்தையும் நாம் போற்றிப் பாராட்ட வேண்டும்" நல்லதை நல்லதென்று சொல்வதில் லோபத்தனம் எதற்கு?

புறநானூறும் சரித்திரமும் முன்னுரை இந்தியர்களிடம் சரித்திர உணர்ச்சி இல்லை.

என்ற குறைபாடு மேல்நாட்டினர் பலரால் அவ்வப்பொழுது சொல்லப்படுவதுண்டு. அல்பெருனி என்னும் அராபியர் வெளிப் படையாக அ ப் ப டி யே எழுதி யிருக்கிறார், மெக்கன்ஸிதுரை என்பவர் பிற்காலத்தில் தமிழ் நாட்டிலும் தெலுங்கு தேசத்திலும் கர்ண பரம்பரையாக வழங்கும் செய்திகளைத் தொகுத்து எழுதுவித்தவர். அவர் தொகுத்த கையெழுத்துப் பிரதிகள் இன்று சென்னைச் சர்வகலா சாலையினரின் ஆராய்ச்சிக்கு உட்பட்டிருக்கின்றன. அந்த மெக்கன்ஸி துரையும் இந்நாட்டினருக்குச் சரித்திர உணர்ச்சி இல்லை என்று சொல்லியிருக்கிறார். -

கி.-9