பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 கி. வா. ஜ. பேசுகிறார்

இந்தக் குறைபாடு ஒரளவு உண்மையானதே; பிற்காலத் தில், நம் நாட்டின் பழைய மரபுகள் சீர்குலைந்து கலை இலக்கியம் முதலிய செல்வங்களையே இழக்கும் நிலை வந்த காலத்தில், நாம் எல்லா உணர்ச்சிகளையும் இழந்து ஒ.இ.)ாம். சரித்திர உணர்ச்சி ஒன்றுதானா? தமிழர்கள் தங்கள் பண்டை இலக்கியங்கள் பல்வற்றை இழந்தனர். இசை நாடகக்கலைகளை இழந்தனர். தங்கள் வாழ்க்கை யினையே இழந்துவிட்டார்கள். ஆதலால் மெக்கன்ஸி. துரையவர்கள் சொல்வதில் உண்மை இருக்கிறதென்று சொல்லலாம். .

ஆனால், எந்தக் காலத்திலும் இத்தியர்கள் அப்படி இருந்ததில்லை; தமிழர்களோ கலைகளையும் இலக்கியத்தை யும் வாழ்க்கையின் ஜீவநாடியாகக் கருதி ஒம்பி வந்தனர். வாழ்க்கையையும் கற்பனையையும் பினைத்து உடம்பையும் உள்ளத்தையும் உயிரையும் வளர்த்து வந்தனர். வாழ்க்கை யின் உண்மைகளை யெல்லாம் பகுத்துப் பகுத்துப் புறப் பொருளாக வைத்துப் போற்றினர். இல்லது இனியது என்று சொல்லப்படும் நிகழ்ச்சிகளை அகப்பொருளென வைத்து ஆயிரமாயிரமாகக் கவி பாடிக் குவித்தனர். அவர்களுடைய புறப்பொருளுக்கு உடலாக அமைந்த செய்திகள் யாவும் உலவியல் நிகழ்ச்சிகளே; அவைகளே சரித்திரம்.

தமிழில் இப்போது கிடைக்கும் பழைய நூல்களுக்குள் கடைச்சங்க நூல்களாகக் கருதப்பெறும் பத்துப்பாட்டு எட்டுத்தொகை என்பவற்றுள் புறப்பொருள்பற்றிய பனுவல் க்ள் யாவும் பண்டைத் தமிழ்நாட்டுச் சரித்திரத்துக்கு அடிப் படையான மூலப்பொருள்களாகும். அவற்றைப் பாடினவர் களுக்கும், அப்பாடல்களைப் போற்றிப் பாதுகாத்தவர்களுக் கும் சரித்திர உணர்ச்சி இல்லை யென்று சொல்லுதல் முறை யாகுமா? ஊர் பேர் ) aTLD ಮೆ. புறப்பொருளமைதியுடைய பாடல்களாகப் பாடிச் சென்றிருந்தால் அந்நல்லிசைச் சான்