பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறநானூறும் சரித்திரமும் - 135

றோர்களுக்கு ஒரு குறைவும் வந்திராது. ஆனால் அவர்கள் அங்ங்ணம் செய்திலர். புறத்துறைப் பாடல்களிற் பெரும் பாலான உ ண் ைம நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு எழுந்தனவென்றே சொல்லலாம். பண்டைத் த மி ழ ர் சரித்திரமென்னும் கோயிலுக்கு அவற்றில் ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு செங்கல் போன்றதாம்" அகத்துறை அமைந்த பாடல்களிலும் சார்த்துவகையால் சங்கத்துச் சான்றோர்கள் பதித்து வைத்த சரித்திரச் செய்தி கள் பல உண்டு. பரணரென்னும் நல்லிசைப் புலவர் தாம் பாடும் பாடல்களிலெல்லாம் சரித்திரத் துணுக்குகளைப் பொருத்தி யமைக்கும் இயல்புடையவர். அகநானூறு முதலிய நூல்களில் அவர் செய்யுட்களைப் பார்த்தால் அவ்வுண்மை வெளியாகும்.

புறப்பொருள் அமைதியையுடைய சங்கப் பாடல்களுள், பத்துப்பாட்டிலுள்ள பொருநராற்றுப்படை, சிறுபாணாற் றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, நெடுநல் வாடை, பட்டினப்பாலை, மலைபடுகடாம் என்பன சரித்திரச் செய்திகள் பலவற்றை நமக்கு அறிவிக் கின்றன. எட்டுத் தொகையுள் ஒன்றாகிய பதிற்றுப்பத்து; தனியே சேர அரசர்களைப் பாடிய பாடல்களையுடையது. ஆதலால் சேரர் சரித்திரத்திற்குச் சிறந்த கருவியாக இருக் கிறது. புறநானூறோ தமிழ்நாட்டுச் சரித்திரத்தை அறிவ தற்கு இன்றியமையாததாய்ப் பெரிய சரித்திரக் கருவூல மாய் விளங்குகிறது. இதனைத் தேடிக் கண்டுபிடித்துத் தமிழுலகுக்கு அளித்த என்னுடைய ஆசிரியப் பெருந்தகை யாகிய மகா மகோபாத்தியாய டாக்டர் உ.வே. சாமி நாதையர் அவர்கள், 'பண்டைக்காலத்தே இத் தமிழ் நாட்டில் இருந்த சேர சோழ பாண்டியர்களாகிய முடியுடை - வேந்தர், சிற்றரசர், அமைச்சர், சேனைத் தலைவர், வீரர் முதலிய பலருடைய சரித்திரங்களும், கடையெழு வள்ளல் களின் சரித்திரங்களும், கடைச்சங்கப் புலவர் பலருடைய