பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

J36 கி. வா. ஐ. பேசுகிறார்:

வரலாறுகளும், அக்காலத்தாருடைய நடை முதலியனவும், இன்னும் பற்பலவும் இந்நூலால் நன்கு புலப்படும்' என்று. எழுதி யிருக்கிறார்கள்.

புறநானூற்றின் காலம்

புறநானூறு கடைச்சங்க காலத்துத் தொகுக்கப் பெற்ற நூல். ஆயினும் இதன்கண் உள்ள பாடல்கள் அனைத்தும் ஒரே காலத்தில் பாடப்பெற்றன அல்ல; பல நூற்றாண்டு களாகப் பாடப் பெற்றவற்றின் தொகுதி என்று சொல்ல. வேண்டும். சேர சோழ பாண்டிய மன்னர்கள் பலரைப் பற்றிய பாடல்கள் இதில் இருக்கின்றன. கி. பி. இரண்டா வது நூற்றாண்டில் வாழ்ந்த ஆரியப்படை கடந்த நெடுஞ். செழியன் என்னும் அரசனே சிலப்பதிகாரத்தில் வரும் நெடுஞ்சேழியனென்று தெரிகின்றது. கடைச்சங்கத்தின் இறுதிக்காலம் அது. அவனுக்கு முன்னரே இருந்த கரிகாலன் முதலியோருடைய காலத்தில் எழுந்த பாடல்களையும் இந் நூலிற் காணலாம். r

இறையனா ரகப்பொருளுரையினால் தலைச்சங்கத்துப் புலவர்களில் முரஞ்சியூர் முடிநாகராயரென்பவரும் ஒருவர் என்று தெரிய வருகிறது. தலைச்சங்க காலம் இன்னதென்று வரையறுக்க இயலாவிடினும், மிகப் பழங்காலத்துப் புலவர் களைச் சேர்ந்தவர் அவர் என்று தெரிந்துகொள்ளும் அளவில் நாம் அச்செய்தியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். புறநானூற்றில் கடவுள் வணக்கத்துக்கு அடுத்தபடி உள்ள முதல் பாட்டு அவருடையதேயாகும். அதில் சேரமான் பெருஞ்சோற்று உதியஞ் சேரலாதனை முடிநாகராயர் பாடி யிருக்கிறார். உதியஞ் சேரலாதன் என்ற அச்சேர அரசன் பாரதப் போரில் வீரர்களுக்குச் சோறு அளித்தான் என்று. புலவர் பாடுகிறார். பெருஞ்சோறு என்பது பலருக்கு ஒரே

சமயத்தில் இடும் அன்னதான த்துக்குப் பெயர்.