பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறநானூறும் சரித்திரமும் 137

அலங்குளைப் புரவி ஐவரொடு சினை.இ நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப் பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்

என்று வருகிறது பாட்டு. இவ்வாறு பெருஞ்சோறு அளித்த சிறப்பால் அந்தச் சேரனுக்கு, பெருஞ்சோற்றுதியஞ் சேர லாதனென்னும் பெயர் வழங்கலாயிற்று. பாண்டவர் படைக்கும் கெளரவர் படைக்கும் ஒருங்கே அவன் சோறு அளித்தானாம். வடநாடு முழுவதும் போர்க்களரியாகி அந் நாட்டு மக்கள் போரில் ஈடுபட்டு நின்றபொழுது இந்நாட்டி லிருந்து அரிசி சென்றதென்றும், அங்ங்ணம் அரிசியைச் சேகரித்து அனுப்பியவன் சேரனென்றும் கொள்வதில் பிழை யொன்றும் இல்லை.

366-ஆம் புறப்பாட்டு, தருமபுத்திரனைக் கோதமனார் பாடியது' என்ற குறிப்புடன் இருக்கிறது. 'அறவோன் மகனே' என்று புலவர் பாட்டுடைத் தலைவனை விளிக் கிறார். இதனுள் கூறப்பெற்ற தருமபுத்திரன் பஞ்சபாண்ட வர்களுள் மூத்தவனாகிய தருமபுத்திரனோ, அன்றிப் பாரத காலத்துக்குப் பிறகு அறவோன் மகனாகிய அவனுடைய இயல்புகளில் ஈடுபட்டு அவன் பெயரை வைத்துக்கொண்ட தமிழ்நாட்டரசனோ தெரியவில்லை. அவ்வரசன் பாரத காலத்தை அடுத்து இருந்தவன் என்று கொள்வதற்கு இடமுண்டு. -

தலைச்சங்கப் புலவர்களுள் வான்மீகனார் என்பவர் ஒருவர். புறநானூற்றில் 358-ஆம் பாட்டை இயற்றியவர் வான்மீகியார் என்பவர். உலகத்தையும் தவத்தையும் தனித் தனியே இரண்டு தட்டில் வைத்து நிறுத்தால் தவத்திற் கடுகளவிற்குக் கூடச் சமானமாக உலகம் நில்லாது: என்று தவத்தைப் பாராட்டுகிறார் அவர். -