பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 38 கி. வா. ஜ. பேசுகிறார்

வையமுந் தவமுந் தூக்கிற் றவத்துக்கு ஐயவி யனைத்தும் ஆற்றாது. தவம் புரிந்து இராமாயணமாகிய ஆதி காவியத்தை வடமொழியில் இயற்றிய வான்மீகி முனிவரை நாம் அறிவோம். அம்முனிவர் பெயரும், தவத்தைப் பாராட்டும் இயல்பும் உடைய இப்புலவர் முரஞ்சியூர் முடிநாகராயரைப் போலப் பழந்தமிழ்ப் புலவர் வரிசையில் சேர்ந்தவரென்றே தோன்றுகிறது. .

மார்க்கண்டேயரைப்பற்றிய வரலாறுகள் தமிழ்நாட் டிலே தான் அதிகமாக வழங்குகின்றன. தமிழ்நாட்டுத் திருக் கடவூரில் மார்க்கண்டேயர் காலனை வென்ற கதை புராண மாக வழங்கி வருகிறது. புராண வரலாறு முழுவதையும் நம்பாவிடினும், அப்பெரியார் தமிழ் நாட்டினர் என்று கருது வதற்கு ஒரு சிறு ஆதாரம் புறநானூற்றில் இருக்கிறது. தமிழ் நூல்களில் மார்க்கண்டேயனாரென்ற புலவரைப்பற்றிய சில குறிப்புகள் கிடைக்கின்றன. அவர் இயற்றி நூல் தலை யாய வோத்து, படிக்கவேண்டிய நூல்களில் முதல் வரிசை யில் உள்ளதென்று நச்சினார்க்கினியர் சொல்கிறார்.

மார்க்கண்டேயனார் காஞ்சி என்ற ஒரு நூற்பெயரும் ஒருபாடலும் யாப்பருங்கல விருத்தியில் மேற்கோளாக வந்தி. ருக்கின்றன. புறநானூற்றில் மார்க்கண்டேயனார் என்னும் புலவர் பாடியதாக உள்ள ஒரே ஒரு பாடலும் (365) பெருங் காஞ்சி யென்னும் துறையைச் சார்ந்தது. மக்கள் அறம் பொருள் இன்பம் வீடென்னும் நான்கு உறுதிப் பொருளைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும், அவற்றைத் தெரிவற். குரிய நூல்களை ஆராய வேண்டுமென்பது தம்மனோர் கொள்கை. அந்நான்கு பொருள்களுள்ளும் வீட்டுநெறி பற்றிய நூல்கள் சிறந்தன. . . . - -

ஆதலின் தலையாய ஒத்தென்று நச்சினார்க்கினியராற் பாராட்டப் பெறும் மார்க்கண்டேயனார் நூல் உலக நிலை யாமையை அறிவுறுத்தி வீட்டு தெறியைக் கூறுவதாக இருத்