பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறநானூறும் சரித்திரமும் 1so

தல் கூடும். காஞ்சி யென்னும் புறத்திணை உலக நிலையா மையைக் கூறும் செய்திகளை உடையது. நச்சினார்க்கினியர் கூறும் தலையாய வோத்து, மார்க்கண்டேயனார் காஞ்சி புறநானூற்றிலுள்ள பெருங்காஞ்சிஎன்னும் மூன்றும் ஓரினப் பாடல்களேயாதலால் இம்மூன்றன் ஆசிரியரும் ஒருவரே என்று கொள்ளலாம். தவம் புரிந்த சிவபக்தராகப் புராணத் தில் கூறப் பெறும் மார்க்கண்டேயரும், நிலையாமையை அறிவுறுத்தி வீட்டு நெறி காட்டும் மார்க்கண்டேயரும் ஒருவரேயோ என்ற ஐயத்தை ஆராய்ச்சியாளருக்கு விட்டு

விடுகிறேன்.

பழஞ் செய்திகள்

புறநானூற்றில் நேரே ஒரு நிகழ்ச்சியை அது நிகழ்ந்த காலத்திலேயே பாடிய பாடல்களே பெரும்பாலும் உள்ளன. அப்பாடல்களிடையே முன் நிகழ்ந்த சில பழஞ் செய்திகள் சார்த்து வகையாற் சொல்லப் பெறுகின்றன. அவை தமிழ் நாட்டுப் பழஞ்சரித காலத்தைச் சார்ந்தவை.

தமிழ் நாட்டின் தென் பகுதியில் குமரியாறு, பஃறுளி யாறு என்னும் ஆறுகளும் குமரியென்னும் மலையும் ஒரு காலத்தில் இருந்தன. தலைச் சங்கமும் இடைச் சங்கமும் இருந்த காலத்தில் அப்பகுதி இருந்தது என்பர். பிற்காலத் தில் அத் தென்பகுதி கடலாற் கொள்ளப்பட்டது.

அந்தப் பழங் காலத்தில் கடல்வடிம்பலம்ப நின்ற பாண்டியன் என்ற அரசன் ஒருவன் இருந்தான். அவனுடைய பெருமையை மதுரைக் காஞ்சியும், சிலப்பதிகாரமும் கூறுகின்றன. பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப்பெரு வழுதியை வாழ்த்த வந்த நெட்டிமையாரென்னும் புலவர்: 'நீ உன்னுடைய முன்னோனாகிய நெடியோனுக்குரிய பஃறுளியாற்று மணலைக் காட்டிலும் பல காலம் வாழ்வா யாக' என்று வாழ்த்துகிறார்.