பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 கி. வா. ஜ. பேசுகிறார்

தம்கோச் செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க் கீத்த முந்நீர் விழவின் நெடியோன் தன்னிர்ப் பஃறுளி மணலினும் பலவே. (9) சோழர்களுள் தூங்கேயி லெறிந்த தொடித்தோட் செம்பியன் என்னும் ஒருவனைப் பற்றிய பழஞ் செய்தி ஒன்று வருகிறது. ஆகாயத்தில் தொங்கிய மதிலொடு கூடிய நகரத்தை எரிந்து வெற்றிகொண்டான் அச்சோழன் என்று தெரிகிறது. பிற்காலத்தில், அவுணருக்குரிய மதிலை அழித் தானென்று இச்செயலை மிகையாகக் கூறின புலவரும் உண்டு. அக்காலத்தில் ஏதோ உபாயத்தால், வளைத்த மலை யைச் சார ஒரு மதிலைத் தொங்கச் செய்து அதன் கண்ணே பிறர் புகற்கரிய நிலையில் இருந்த பகைவரை வேறொருபா யத்தால் மதிலை யழித்து, வென்ற வீரச் செயல் நாளடை வில் இப்படி மாறி யிருத்தல்கூடும். சிபிச் சக்கரவர்த்தியைப் பல இடங்களில் சோழர்களின் முன்னோன் என்று புறநானுற்றுப் பாடல்கள் சொல்கின்றன. கடலில் சென்ற நாவாயை அலைத்த காற்றை அடக்கிய சோழன் ஒருவனை *வளிதொழி லாண்ட உரவோன்’ என்று வெண்ணிக் குயத்தியார் குறிக்கின்றார். .

சேரமானுடைய உறவினனும் ஏழு வள்ளல்களில் ஒருவனுமாகிய அதிகமான் நெடுமானஞ்சியைப் பாடும் ஒரு புலவர் அவனுடைய முன்னோர்கள் இந்நாட்டிற்குக் கரும்பைக் கொணர்ந்தனரென்று சொல்கிறார்.

இவற்றையன்றி, மெளரிய மன்னர் இந்நாட்டுக்கு வரும் போது மலைகளைப் பிளந்து வழி செய்தனரென்ற பழஞ்செய்தியை, - -

விண்பொரு நெடுங்குடைக் கொடித்தேர் மோரியர் திண்கதிர்த் திகிரி திரிதரக் குறைந்த உலக விடைகழி யறைவாய் - (175) என்று ஒரு புலவர் பாடுகிறார். . . -