பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

X11

சொல்லியாயிற்று. கடைசியில் அந்தக் கருத்தை முடிக்கும் போது, அவரிடம் மல்லிகை மாலையை நாம் எப்படி எதிர் பார்க்க முடியும்: என்ற கேள்வியாகக் கேட்டால், அதே எதிரில் உட்கார்ந்திருக்கிறார்களே அவர்கள், முடியாது, முடியாது தான்’ என்று மனசுக்குள்ளே சொல்லும்போது நம் பிரசங்கத்துக்கு எவ்வளவு சுவை உண்டாகி விடுகிறது! ஒரு கேள்விக் குறிதான்; ஆனாலும் அதில் சூஷ்மம் இருக்கிறது.

இப்படியே ஆச்சரியக் குறிகளால் பிரசங்கத்தில் ஜாலம் செய்யலாம்; ரேடியோப் பிரசங்கத்தில் நன்றாகச் செய்ய லாம். என்ன ஆச்சரியம்! ஒரு சின்ன மலர் பங்களாக்களி லெல்லாம் தொங்கும் கொடிகளில் இருக்கின்றனவே, அந்த மாதிரி கண்ணைப் பறிக்கும் வர்ணங்கள் இல்லை; தாமரைப் பூவைப் போன்ற பெரிய உருவம் இல்லை; சுத்த வெள்ளை நிறம்; சிறிய உருவம். இதற்குள்ளே எவ்வளவு நறுமணம்! மனசைக் கவரும் மணம்: மனசின் ஒட்டத்தை நிறுத்தும் மணம்! அதுதான் மல்லிகையின் பெருமை!’

இந்த விஷயத்தைச் செறிவுடைய கட்டுரையில் சில வார்த்தைகளால் எழுதி விடலாம். பிரசங்கத்திலோ, ஜீவ னோடு ஒரு குரல் பேசுகிறதென்பதை நினைவுறுத்தக் கருவி யாக இருக்கும் தொனி பேதங்களைப் பிரயோகம் செய்ய இந்த வாக்கியங்கள் உபயோகப்படுகின்றன.

'அட! இன்னும் இவனுக்குக் கோபம் ஆறவில்லையே! சரி, சரி; இவனுடைய பகைவர்களுக்கு அதோ கதிதான். இந்தத் தவமகனைப் பார்த்துங்கூட இவன் கண்களில் சிவப்புப் போகவில்லையே!”

‘புஸ்தகத்தின் உருவ அழகைப் பற்றிச் சொல்லப் போனால், அடே அப்பா அந்தக் காலம் எங்கே, இந்த காலம் எங்கே? - -

“அவனுக்கு உறைத்தால்தானே? அவனும் ஆண் பிள்ளையா? சி!"