பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xiii

'அடடா! என்ன பக்தி விசுவாசம்! என்ன உபசாரம்! அப்புறம்?

மேடைப் பிரசங்கத்தில் உபயோகமாகும் சரக்குகள் இவை. இவற்றை ரேடியோப் பிரசங்கத்திலும் உபயோகப் படுத்தினால், இது பேச்சு என்று தோன்றும்.

இன்னும், தமிழ் மொழியில் தொனி பேதங்களால் விஷயத்தை வற்புறுத்தவும், கேட்பவர்களுக்கு மேலே என்ன வருகிறதென்ற ஆவலை உண்டாக்கவும் உபயோகமான தந்திரங்கள் பல உண்டு. அவற்றை எல்லாம் பயன்படுத்த வேண்டும். இடையிடையே ஹாஸ்யம் கலந்தால்-உரிய இடத்தில் ரசம் தப்பாமல் பொருந்தி இருக்கும்படியாகக் கலந்தால்-பிரசங்கத்தின் சுவை மிகுதி ஆகும். வேகத்தைச் சின்னஞ்சிறு வாக்கியங்களால் புலப்படுத்தியும், நிதானத் தைப் பெரிய வாக்கியங்களால் குறிப்பிட்டும் பேசினால் ரசமாக இருக்கும்.

இப்படி அநுபவத்தினாலே-ரேடியோ கேட்கும் அது பவம், ரேடியோவில் பேசும் அநுபவம் இரண்டையுந்தான் சொல்கிறேன்-தெரிந்துகொள்ளும் தொழில் ரகசியங்கள்: எவ்வளவோ உண்டு. ரேடியோப்பிரசங்கம் ஒரு தனிக் கலை. மேடைப் பிரசங்கமும் கலைதான். ஆனால் இரண்டும் ஒரே கலையென்று சொல்ல முடியாது. சிறந்த மேடைப் பிரசங்கி ரேடியோவில் சப்பையாகப் போய்விடலாம். ரேடியோவிலே புகழ்பெற்ற பிரசங்கி மேடைப் பிரசங்கத்துக்கு ஏற்ற விரிவு இல்லாமல் இருக்கலாம். முதலில் சொன்ன வகையே அதிகம்.

4. இவ்வளவு செய்தியும் நானாக ஊகித்து அறிந்துகொண் டவை. ஆனால் காரியத்தில் நான் செய்த ரேடியோப் பிரசங் கங்கள் எப்படி இருந்தன என்பதை நான் எவ்வாறு சொல்ல முடியும்? அவ்வப்போது ரேடியோக்காரர்கள், இன்ன விஷ ஆயத்தைப் பற்றிப் பேச வேண்டும்’ என்று கேட்கிறார்கள்.