பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xiv

அதைப் பற்றிய செய்திகளைத் தொகுத்து, *4srrLDmr சோமா' என்று ஓர் உருவம் கொடுத்துக் காற்றிலே மிதக்க விட்டு விடுகிறேன். அப்புறம் அதை யார் கவனிக்கிறார்கள்? எனக்குக் கொடுத்த விஷயங்களெல்லாம் இலக்கிய சிம் பத்தமானவை. ஆகையால் அன்றன்று திகழும் செய்தி விமரிசனத்தைப் போவில்லாமல், பல காலத்துக்கும் பொது வான இலக்கிய விமரிசனத்தின் நிழலிலே ஒதுங்கும்படியாக வாவது இவை அமையும் என்று நினைக்கிறேன். காற்றோடு போய்விடாமல் அச்சிலே அமைத்தால் பயன்படுமென்ற எண்ணத்தை அன்பர்கள் உண்டாக்கினமையால் இந்த "மல்லிகை மாலை"யைத் தொடுக்கும்படியாக நேர்ந்தது.

இந்தப் புஸ்தகத்தில் வானொலிப் பிரசங்கள் இருக்கின்றன. அவற்றைப் பதிப்பித்துக் கொள்ள அனுமதி அளித்த அகில இந்திய ரேடியோ நிலையத்தாரிடம் மிக்க நன்றி பாராட்டுகிறேன். இவற்றில் சில சில இடங் களில் சில விஷயங்கனைக் கூட்டியிருக்கிறேன். பிரசங்: கத்தை முதலில் எழுதியபொழுது எழுதியவை அவை. மேடைப் பிரசங்கமாக எழுதிப் படித்தது புறநானூறும் சரித்திரமும்’ என்ற கட்டுரை.

இலக்கிய விமரிசனம் தமிழில் இன்னும் சரியாக உருப் பெறவில்லை. ஆயினும் இலக்கியச் சுவையை எப்படி நுகர வேண்டும் என்பதை உணர்த்தும் பிரசங்கக் கட்டுரைகள்’ அவ்வப்போது வெளியாகின்றன. இந்த வகையில் இப்புஸ்த கத்தில் உள்ள கட்டுரைகள் சேருமென்று அன்பர்கள் நினைத்தால் அந்த முத்திரையை வைத்துக்கொள்ளட்டும். 'இல்லை, இல்லை; அதற்குத் தகுதி போதாது' என்று எடை போட்டாலும் குற்றம் இல்லை; "படிக்க முடிகிறது; படித்து சசிக்க முடிகிறது. சொன்ன விஷயம் மயக்கமின்றித் தெளிவாகப் புரிகிறது' என்ற மதிப்புரையை அளித்தால் போதும்: காற்றோடே போய்விடாமல், இவைகளை இந்தப் புஸ்தகத்திலே அடைத்ததற்குப் பயன் கிடைத்தது என்று ஆறுதல் பெறுவேன். -கி. வா. ஜகந்நாதன்