பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 - கி. வா. ஜ. பேசுகிறார்

பற்றிய பாடல்களும் அமைந்திருக்கின்றன. 217 முதல் 256 முடியக் கையறு நிலையும் பிறவுமாகிய அவலச்சுவை அமைந்த துறைப் பாடல்களையும், 257 முதல் ஒரு வரை யறையின்றிப் பல புறத்துறை யமைந்த செய்யுட்களையும் காணலாம்.இடையிடையே பாண் பாட்டு, பாடாண்டிணை, காஞ்சித்திணை பற்றிய பாடல்கள் ஒருசேரக் காணப்படும். பொதுவாகப் புறநானுாற்றுப் பாடல்களின் தொகுப்புக்கு உரிய முறை இன்னதுதான் என்று வரையறுத்துச் சொல்ல இயலவில்லை; ஆகவே அந்த முறைபற்றிச் சரித்திரத்தை உணர்ந்து கொள்ளல் இயலாது.

அரசியல்-அரசன்

தமிழர் அரசியலில் நடுவண் இருந்து திகழ்பவன் அரசன் தான். அரசன் இல்லாத நாட்டை அவர்கள் கற்பனை செய்து பார்த்தும் இருக்க மாட்டார்கள். நாட்டை உடலாக வும் அரசனை அதன் உயிராகவும் எண்ணி அவனுக்குச் சிறப்புச் செய்தார்கள். .

நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் அதனால், யான் உயிர் என்ப தறிகை வேன்மிகு தான்ை வேந்தற்குக் கடனே என்று மோசிகீரனார் பாடுகிறார். அரசன் அறிவு, அன்பு, ஆற்றல் என்பன உடையவனா யிருத்தல் வேண்டும். அறிவினால் நாடு காவலுக்குரியன ஒர்ந்து முறை தவறாது காப்பாற்றுதலும், அன்பினால் குடிமக்கள் நலன் கருதி ஆவன செய்தலும் இரவலருக்கு ஈதலும், ஆற்றலினால் பகையரசரால் வரும் ஏதத்தைத் தடுத்தலும் போரில் வெற்றி பெருதலும் அவன்பால் அமைகின்றன.

கிள்ளிவளவனை மாறோ க் கத் து நப்பசலையார் என்னும் பெண் புலவர் பாடுகிறார்: "கிள்ளிவளவனே,