பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறநானூறும் சரித்திரமும் 置4蕊

அரசர்களுக்கு வேண்டிய ஈகை, அடுதல், நீதி செலுத்துதல் என்பவை நின் பரம்பரைக்கே சிறப்பாக உரியவை; வழி வழி, வந்த பிதுரார்ஜித் சொத்து. ஆகவே நீயாகச் சம்பாதித்தது. ஒன்றும் இல்லை' என்று சொல்லுகிறார். அவனைப் புகழா மல் புகழும் முறை பாராட்டுதற்குரியது.

புறவின் அல்லல் சொல்விய கறையடி யானை வான்மருப் பெறிந்த வெண்கடைக் கோனிறை துலாஅம் புக்கோன் மருக ஈதல்நின் புகழும் அன்றே. சிபிச்சக்கரவர்த்தி தன் உடம்பையே அறுத்துக் கொடுத் தான்; கடைசியில் தானே தராசுத் தட்டில் ஏறி உட்கார்ந்து கொண்டான். உடலைக் காட்டிலும் கொடுக்கக் கூடிய வேறு சிறந்த பொருள் என்ன இருக்கிறது? நீ கொடுக்கிறாய் என்றால் இது சிபியிலிருந்து வழிவழி வந்த பழக்கம்.

பகைவரைக் கொன்று வெற்றி பெறுவது உனக்குச் சொந்தமா? அதுவும் இல்லை.

- சார்தல் ஒன்னா ருட்குந் துன்னரும் கடுந்திறல் . தூங்கெயில் எறிந்தநின் ஊங்கணோர் நினைப்பின் அடுதல்நின் புகழு மன்றே. - உன்னுடைய முன்னோர்கள் வீரம் சாமான்யமானதா? ஆகாசத்தில் தொங்கிங் கொண்டிருந்த மதிலை அழித்து வென்றார்கள்; வீரம் உங்க ள் பரம்பரையினருடன் பிறந்தது. ஆகையால் அதையும் உனக்குப் புகழாகச் சொல்லக் கூடாது. -

முறைமை? அது தான் நியாயம் வழங்குதல்.

. . கெடுவின்று மறங்கெழு சோழர் உறந்தை அவையத்து அறம்நின்று நிலையிற் றாகலின், அதனால் முறைமை நின் புகழும் அன்றே. . -