பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறநானூறும் சரித்திரமும் I 47

எறிச்சிலுரர், பிசிர் என்பன போன்றவை புலவர்களுக்குரிய ஊர்கள். இலவந்திகைப் பள்ளி, குராப்பள்ளி, குளமுற்றம்: கோட்டம்பலம் முதலியன அரசர்கள் துஞ்சின இடங்கள். கோவலூர், தலையாலங்கானம், திருப்போர், வெண்ணி முதலிய இடங்கள் போர் நிகழ்ந்த ஊர்கள். காவிரிப்பூம் பட்டினம், தொண்டி, முசிறி எ ன் பன கடற்கரைப் பட்டினங்கள். .

கரும்பும் நெல்லும் உடைய சோழநாடுதான் நிலவளம் சிறந்ததென்பதைப் பிற்காலக் கவிஞர் பலவாறு வர்ணித் திருக்கிறார்கள். மழையின்றிக் கோள்நிலை மாறுபட்டாலும் அந்தண் காவிரி வந்து பல கால்வாயாக ஒடி ஊட்டும் சோழ நாடுதான் நாடு என்று ஒரு பழம் புலவர் புறநானூற்றில் பாடுகிறார். ஆவூர் மூலக்கிழார் என்னும் அப்புலவர் சோழ நாட்டின் நிலவளத்தை ரசமாகச் சொல்கிறார். யானை யைக் கட்டித் தீனி போடுவது என்று இப்போது 8քցի பழமொழி வழங்குகிறது உங்களுக்குத் தெரியும். செல்வம் நிரம்பியவர்களே யானையை வைத்துக் கொள்ளலாம். சோழ நாட்டில் ஒரு பெண் யானை படுத்துக்கொள்ளும் அளவுக்குள்ள நிலத்தை வைத்துக் கொண்டு ஏழு ஆண் யானைகளுக்குத் தீனி போடலாம்; அவ்வளவு வளச்செறி வுடைய பூமியாம். . .

ஒருபிடி படியும் சீறிடம் . எழுகளிறு புரக்கும் நாடுகிழவோயே என்று பாராட்டுகிறார் புலவர். .

இப்படி நிலவளத்தால் ஒரு நாடு சிறந்திருந்தால் மட் டும் போதாது, அந்நாட்டில் வாழ்வோரும் சிறந்திருத்தல் வேண்டும். அது பள்ளமானாலும் சரி, மேடானாலும் சரி; சான்றோர் எங்கே தங்குகிறார்களோ, அவ்விடந்தான் நல்ல

இடம். -