பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 கி. வா. ஜ. பேசுகிறார்

எவ்வழி நல்லர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே! நல்ல அரசன் இருக்கும் நாட்டில் நல்லவர்கள் சேரு. வார்கள். (117) கோஒல் செம்மையிற் சான்றோர் பல்கி,' ஆகவே இயற்கை வளனும் செங்கோல் அரசனும் சேர்ந்த, நாடுதான் தமிழரின் லட்சிய நாடென்று சொல்லலாம்.

சேரமான் பெருஞ்சோற்றுதியஞ் சேரலாதன் என்னும் அரசன் சோழ பாண்டிய நாடுகளைத் தன் அடிப்படுத்தி ஒரு தனி மன்னனாக ஆண்டிருந்தான் போலும். அவனுடைய நாடு கீழ்கடல் முதல் மேல்கடல் வரையில் பரந்திருந்தது. பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் பரப்பைச் சொல்லும்போது, பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில் சூரியன் அஸ்தமிப்பதில்லை. என்று சதுர்படச் சொல்லுவார்களே, அந்தமாதிரி ஒரு புலவர் சேரனது நாட்டுப் பரப்பைச் சொல்கிறார். -

நின்கடற் பிறந்த ஞாயிறு பெயர்த்துநின் வெண்டலைப் புணரிக் குடகடற் குளிக்கும் யாணர் வைப்பின் தன்னாட்டுப் பொருந. (2).

நாடு காவல்

செங்கோல் திறம்பாத அரசனைக் குடிகள் புகழ்வர், 'குடிபழி நூற்றறும் கோல'னாதலை அரசர் விரும்பார். குழந்தையை வளர்ப்பவரைப்போல அன்பும் அருளும் உடையராகி நாட்டைப் பாதுகாப்பார். இல்லையாயின் நரகம் பெறுவர். செங்கோல் மன்னனுடைய நாட்டில் மழை. யின்றிப் பஞ்சம் நேர்தல் இல்லை என்று பழந்தமிழர் நம்பினர். நியாயம் வேண்டுவென்று குடிமக்கள் தன்பால் வந்தபொழுது எளிதில் நீதி கிடைக்கும்படி செய்யும். அரசனது நாட்டில் மழை தவறாமற் பெய்யும். மாரி பொய்த் தாலும், விளைவு குறைந்தாலும், இயற்கையில் நிகழாத உற்பாதங்கள் தோன்றினாலும் உலகத்தார் அரசரைப்