பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறநானூறும் சரித்திரமும் 149

பழிப்பார்கள். ஆதலின் குடிமக்களைக் காக்கும் திறமை மிக்கவனாக அரசன் இருக்க வேண்டும்.

மக்களுக்கு இயற்கைப் பகையாக இருப்பது பசி; செயற்கைப் பகையாக இருப்பது பிறரால் வரும் துன்பம். பசியைத் தீர்க்க நல்ல உணவு கிடைக்கும்படி செய்ய வேண்டும். உணவு கிடைப்பதற்கு நிலத்தை வளம்படுத்த வேண்டும். வானோக்கி விளையும் புலன்களாக இருந்தாலும் ஏரி, குளங்கள் முதலிய நீர் நிலைகளைச் செப்பனிட்டுக் கரையை உயர்த்தி நீரைத் தேக்க வேண்டும். அப்பொழுது விளைவு குன்றாமல் இருக்கும். குடபுலவியனாரென்னும் புலவர் இந்த ஆக்க வேலைகளைப் பற்றி மிக அழகாகப் பாண்டியன் நெடுஞ்செழியனுக்குச் சொல்கிறார்.

நீரின் றமையா யாக்கைக் கெல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே உண்டி முதற்றே உணவின் பிண்டம் உணவெனப் படுவது நிலத்தோடு நீரே நீரும் நிலனும் புணரி யோரீண்டு உடம்பும் உயிரும் படைத்திசி னோரே நிலனெளி மருங்கின் நீர்நிலை பெருகத் தட்டோ ரம்ம இவட்டட் டோரே தள்ளா தோரிவட் டள்ளா தோரே. படைவலியால் பெறும் வெற்றிக்கும் காரணமாக இருப்பது உணவுதான். ஆதலின் அவ்வுணவை விளைக்க வேண்டியன ஆற்றுதலன்றி, உழுதொழில் புரியும் குடிமக்க ளையும் பாதுகாத்தில் வேண்டும்; “பகடு புறந்தருநர் பாரம் ஒம்பிக், குடிபுறந் தருகுலை பாயின், அடிபுறந் தருகுவர் _ 6த்ார்ே என்று ஒரரசனுக்கு ஒரு புலவர் அறி வுறுத்துகிறார். அவ்வேளாளரிடம் கொள்ளுந் திறையை நெறியறிந்து கொள்ள வேண்டுவது அரசள் கடமை. அப்படி யன்றிப் பேராசையினால் அளவுக்கு மிஞ்சிய வருவாயை

இ-10