பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 கி. வா. ஜ. பேசுகிறார்

மொழியை" உண்மையென்று தெளிதல் கூடாது. தான் உண்மையாக ஒரு தீமையைக் கண்டால் அக்குற்றத்துக் கேற்ற தண்டனையை அளித்தலே முறை. நமரெனக் கோல்கோடாது, பிறரெனக் குணங்கொல்லாது நீதி வழங்க வேண்டும். இதன் பொருட்டுத் தமிழ் மன்னர்கள் அறங்கூர் அவையம் ஒன்றை நிறுவிக் குணநலஞ் சான்றவர்களை அந்த அவையத்தில் நாட்டி முறை வேண்டினவர்க்கு முறை. வழங்கச் செய்தன்ர். உறையூரில் இருந்த அறங்கூரவையம். மிக்க புகழ்பெற்றது. அந்த அவையத்தில் தமக்கொரு குறை. யுள்ளவ ரெல்லாம் வந்து முறையிடுவார்கள். சான்றோர். அதனைக் கேட்டுந் தீர்ப்பர்.

சான்றோ ரிருந்த அவையத் துற்றோர் ஆசா கென்னும் பூசல் போல (26.6}

என்று ஒரு புலவர் வழக்குடையோனது முறையீட்டை உவமையாகச் சொல்கிறார்.

பூதப் பாண்டியன் தன் பகைவரைத் தோல்வியுறச் செய்ததாகச் சொல்லும் வஞ்சினம் ஒன்றில்,

அறநிலை திரியா அன்பி னவையத்துத் திறனில் ஒருவனை நாட்டி முறைதிரித்து மெலிகோல் செய்தே னாகுக (71) என்று கூறிக் கொள்கிறான். இதனால் அறங்கூர் அவையத் தில் தக்க சான்றோர் இருத்தலின் அவசியம் புலப்படும்.

புல வர் பண்டைத் தமிழ் மன்னர் புகழென்றால் உயிருங். கொடுக்கும் இயல்பினர். அப்புகழ் வீரத்தாலும் ஈகையாலும் கிடைக்கும். வீரத்தாற் கிடைக்கும் புகழினும் ஈகையாற்.

பெரும் புகழே சிறந்ததென்று கருதினர். ஈகையைப் பெறும் . இரவலர்கள் பல வகையினர். அந்தணர், புலவர், பாணர்,