பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறநானூறும் சரித்திரமும் 153

விறலியர், கூத்தர் என்பவர்களையே பரிசிலரென்றும் இரவல ரென்றும் வழங்குகின்றனர். வயிற்றுக்கில்லாமல் சோம்பிக் கிடக்கும் வறியர்களாகிய பிச்சைக்காரர்களோ இரவலரென்னும் பிரிவில் வருவதில்லை. நல்வளமுள்ள நாட் டில் பசியும் நோயும் பகையும் இன்மையின் அத்தகைய இரவலர் இரவலர் இல்லை போலும். புலவர் முதலியோர் தாம் பெற்ற பொருள்களை உடனுக்குடன் பிறருக்கு அளித்து விடுதலின் மீட்டும் மீட்டும் உபகாரிகளை நோக்கிச் சென்று பாடியும், இசை பயின்றும் பொருள் பெற்றனர். அவர்கள் பொருள் பெற்ற வரலாறுகளை ஆராய்ந்தால் அது யாசகமாகத் தோன்றாது. அரசராகிய உங்களைப் போன்ற தலைமையை உடையது எங்கள் வாழ்க்கை என்று கோஆர்கிழார் பாடுகிறார்.

தம்முடைய கலைத்திறத்தை உணர்ந்து பாராட்டும் உபகாரிகளிடத்திலேதான் அவர்கள் சென்றார்கள். வரிசை அறிந்து நல்கும் திறமை யார்பால் உண்டோ அவர்களே புலவர்களுடைய புகழுக்கு உரியவர்கள். 'வரிசைக்கு வருந் தும் இப் பரிசில் வாழ்க்கை' என்று ஒரு புலவர் சொல்கிறார்.

ஒருதிசை ஒருவனை உள்ளி நாற்றிசைப் பலரும் வருவர் பரிசில் மாக்கள் வரிசை அறிதலோ அரிதே

என்று கபிலர் மலையமான் திருமுடிக் காரிக்குச் சொல் கிறார். வரிசையறிந்து அன்பு பாராட்டிக் கொடுப்பது சிறி தாயினும் புலவர் போற்றிக்கொள்வர். பெருஞ்சித்திரனார் என்ற புலவர் அதியமான் நெடுமான் அஞ்சியைப் பார்க்கப் போயிருந்தார். அவன் ஏதோ வேலையாக இருந்தமையி னால் ஒர் அதிகாரி மூலமாகப் பரிசிலைக் கொடுத்தனுப் பினான். புலவருக்கு கோபம் வந்துவிட்டது. "இந்த அரசன் தான் இதற்காகத்தான் வந்திருக்கிறேனென்று எப்படி அறிந் தானோ! அவன் என்னை நேரில் பாராமல் அனுப்பிய இந்தப்