பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

罩54 கி. வா. ஜ. பேசுகிறார்

பரிசிலை, நமக்கு வேண்டியது. இதுதான் என்று வாங்கிக் கொண்டு போவதற்கு நான் ஒரு வாணிகப் பரிசிலன் அல்லேன். வரிசையறிந்து அன்புடன் கொடுப்பதானால் தினையளவானாலும் இனிதாக இருக்கும்' என்று பாடிப் புறப்பட்டு விட்டார். அவரே குமணனைப் பார்த்து,

உயர்ந்தேத்து மருப்பிற் கொல்களிறு பெறினும் தவிர்ந்துவிடு பரிசில் கொள்ளலென், உவந்துத் இன்புற விடுதி யாயிற் சிறிது குன்றியுங் கொள்வல் என்று சொல்லுகிறார்.

இத்தகைய பெருமிதமுடைய புலவர்களோடு பழகு வதைப் பெரிய இன்பமாகக் கொண்டனர் அரசர். புலவர் பாடும் புகழுடையோர் சுவர்க்க பதவியை அடைவரென்பது அவர்கள் கொள்கை. நெடுஞ்செழியன் வஞ்சினம் கூறுகை யில், என் பகைவர்களை நான் புறங்காணா விட்டால்,

ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி மாங்குடி மருதன் தலைவ னாக உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பிற். புலவர் பாடாது வரைகளன் நிலவரை' என்று சபதம் செய்கிறான். புலவர் பாடாதொழிதலை அவன் எவ்வளவு இழிவாகக் கருதுகிறானென்பதை இந்தச் சொற்கள் தெரிவிக்கும். கழாத்தலையார் என்ற புலவரை இகழ்ந்த ஒர் அரசனது ஊராகிய அரையம் கெட்டது. பெண் கொலை புரிந்து பழிபூண்ட நன்னனென்னும் அரசனையும் அவன் வழி வந்தோரையும் புலவர் பாடாமல் வெறுத்து ஒதுக்கினர். -

புலவருக்கு அஞ்சியொழுகும் ஒழுக்கம் மன்னர்களிடத் தில் இருந்தது. அவர்கள் அறிவுரை மிகவும் கடுமையாக இருந்தாலும் மன்னர் ஏற்றுக்கொண்டனர். கோவூர்கிழார்