பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறநானுாறும் சரித்திரமும் 五岳リ

என்னும் புலவர் பெருமான் தலங்கிள்ளி நெடுங்கிள்ளி. என்னும் இரண்டு தாயத்தினர்க்கிடையே நின்று சமா தானம் செய்தார். கிள்ளிவளவன் மலையமான் மக்களை யானைக்காவின் கீழ் இடறப் புக்கபோதும், இளந்தக்கனென் னும் புலவனை ஒரு சோழன் பகையரசனுடைய ஒற்ற னென்று கருதி, கொலைத் தண்டனை விதித்தபோதும் கோவூர் கிழாரின் அறிவுரையினால் அவர்களின் உயிர்கள் காலன் வாயினின்றும் மீண்டன. அரசன் ஆணையை அடைக்கும் ஆற்றல் பெற்றன. புலவர் வாய்மொழி.

புலவர்களுக்கு, எல்லோரும் இன்புற்று வாழ வேண்டு மென்பதே நோக்கம். அதனால் மனம் வேறுபட்டவர்களை எல்லாம் தம்மாலான வரையில் முயன்று சமாதானம் செய் வித்து ஒன்றுபடுத்துவர். கோப்பெருஞ் சோழனுக்கும் அவன் மக்களுக்கும் இடையே போர் மூண்டபொழுது புல்லாறுர் எயிற்றியனாரென்ற புலவர் அச்சோழனுக்கு நல்லுரைகூறிச் சமாதானம் செய்வித்தனர். ஏழு வள்ளல்களில் ஒருவனாகிய பேகனென்பவன் தன் மனைவியாகிய கண்ணகியை அகன்று வாழ்ந்தானாக, கபிலர், அரிசில்கிழார் முதலிய புலவர்கள் அவனிடம் சென்று இரந்து மனைவியையும் கணவன்ையும் ஒன்றுபடுத்தினர். ... "

ஒற்றுமை கண்டவிடத்து மனமகிழ்ச்சி இன்புற்று மேன் மேலும் அது வலி பெறும்படி செய்வதில் புலவர்கள் கண்ணும் கருத்தும் உடையவர்கள். சோழன், பாண்டியன் என்னும் இருவரும் ஒன்று சேர்வதென்பது மிகவும் அரிய காரியம். ஒருவரை ஒருவர் பகைவராக எண்ணுவதுதான் வழிவழி வந்த சம்பிரதாயம். எப்போதாவது இந்தப் பகை நீங்கி ஒன்றுபட்டுவிடப் போகிறார்களென்று எண்ணிய சில புண்ணியவான்கள் அங்கங்கே பகைக் கொள்ளியை யிட்டு மூட்டிவிடுவார்கள். இந்த நிலையில் அவர்கள் ஒன்றுபடுவது எங்கே? - -