பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.# 63 கி. வா. ஜ. பேசுகிறார்

'இதுதானா பிரமாதம்? நல்ல பசு வெண்ணெயாகக் கொடுக்கச் செய்கிறேன்' என்று மூப்பனார் கூறினார்.

கிருஷ்ணையரை ராமபத்திர மூப்பனார் கபிஸ்தலத் திற்கு அழைத்துச் சென்றார். அங்கே உள்ள ஆற்றங்கரை யில் அமைந்த நாணற்காட்டில் மூப்பனாரால் ஒரு சிறு குடிசை அமைக்கப்பட்டது. கி. ரு ஷ் ைண ய ர் அங்கே நாள்தோறும் விடியற்காலையிலும், மாலையிலும் சென்று சாதகம் செய்யத் தொடங்கினர். அக்காலத்தில் அவருடைய தொனி நெடுந்துாரம் கேட்குமாம். இவ்வாறு சாதகம் செய்து வருங்காலத்தில் மூப்பனாருடைய வேலைக்காரர்கள் கையில் பசு வெண்ணெயை வைத்துக்கொண்டு காத்திருப் பார்கள்; வேண்டியபோது அ ைத க் கிருஷ்ணையர் உபயோகப்படுத்திக் கொள்வார்.

இவ்வாறு அசுர சாதகம் செய்ததனால் கிருஷ்ணையர் கனமார்க்கத்தில் நல்ல தேர்ச்சி பெற்றார். ராஜ சபையில் பாடலாமென்ற தைரியம் அவருக்கு வந்தது. அந்தச் செய்தி தஞ்சை அரசருக்குத் தெரிவிக்கப்பட்டது. அவர் கிருஷ்ணை யருடைய கனமார்க்கம் அரங்கேற்றப்படும் தா ைள ஆவலோடு எதிர்பார்த்திருந்தார். பொப்பிலி கேசவையா வும் அதுவரையில் தஞ்சையிலேயே தங்கி யிருந்தனர்.

அரங்கேற்ற நாளன்று தஞ்சை வாசிகளுக்கும் வித்து வான்களுக்கும் உண்டான குதூகலத்தைக் கேட்கவா வேண் டும் பெரிய வித்துவான்களும் பொப்பிலி கேசவையாவும் கூடிய சபையில் அரசருடைய முன்னிலையில் கிருஷ்ணையர் பாடத் தொடங்கினார். உயிரைப் பிடித்துக்கொண்டு அவர் பண்ணிய பயிற்சியின் வலிமை அந்தப் பாட்டில் தெரிந்தது. கனமார்க்கத்தின் உயிர்நிலைகளை யெல்லாம் கிருஷ்ணை யர் தம்முடைய பாட்டிலே காட்டினார். யாவரும் அந்தக் கானாமுத மாரியிலே திளைத்திருந்தனர். எல்லோரையும் விட, பொப்பிலி கேசவையாவுக்கு உண்டான ஆச்சரியத்