பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கனம் கிருஷ்ணையர் I 63

துக்கு அளவே இல்லை; இந்தப் பிள்ளையாண்டான் என்னி டம் சில நாளே இந்த நுணுக்கங்களைத் தெரிந்துகொண் டான். அப்பியாசம் பண்ணின காலங்கூடப் போதாது. இதற்குள் இவனுக்கு இவ்வளவு சக்தி வந்துவிட்டதே. நமக்கு எவ்வளவோ சிஷ்யர்கள் இருந்தும் இப்படி ஒருவன்கூட இல்லையே?’ என்றெல்லாம் அவர் மனம் எண்ணியது. அப் போதப்போது அவர் தலையை அசைத்த காலங்களில் கிருஷ்ணையருக்கு மேலும் மேலும் ஊக்கம் பிறக்கும். கேசவையா அடிக்கடி தம்முடைய வியப்பை வெளிப் படுத்திக்கொண்டே யிருந்தார்.

கிருஷ்ணையருடைய பாட்டு நின்றது. அரசர் கேசவை யாவைப் பார்த்து, இவர் பாடியதெல்லாம் சரியாக இருந் ததா?’ என்று கேட்டார். அவர், 'மஹாராஜாவினிடம் என்னுடைய வியப்பை எப்படித் தெரிவித்துக் கொள்வது? இவர் அளகாய சூரர்; மிகவும் அருமையாக அப்பியாசம் பண்ணி யிருக்கிறார். இந்த மண்ணின் பெருமையே பெருமை! இவர் புகழ் இனிமேல் விருத்தியாகும்” என்று சொன்னார். அரசருக்கு மிக்க மகிழ்ச்சி உண்டாயிற்று. 'எல்லாம் நீங்கள் காட்டிண வழிதான்' என்று உசிதமாகப் பதில் கூறிவிட்டு அவருக்கும் கிருஷ்ணையருக்கும் உயர்ந்த சம்மானங்களைச் செய்தார். அதுமுதல் கிருஷ்ணையர் கனம் கிருஷ்ணையரானார். - -

கனம் கிருஷ்ணையர் வரவரச் சங்கீதத் திறமையிலே விருத்தி அடைந்தார். அவருடைய சங்கீதத்திற்குத் தனிப் பெருமை உண்டாயிற்று. அவர் அவ்வப்போது இயற்றி வந்த கீர்த்தனங்களும் தமிழ் நாட்டிலே பரவின. தஞ்சை ஸ்ம்ஸ்தானத்தில் இருந்து வந்த அவர், பிறகு சில காலம் திருவிடைமருதுசரில் அமரசிம்மரென்னும் சிற்றரசரிடம் இருந்தார். பிறகு உடையார்பாளையம் ஸ்ம்ஸ்தானாதிபதி .யாகிய கச்சிரங்கரென்பவரால் அழைக்கப் பெற்று அங்கே சென்று வசிக்கலாயினர். அது முதல் அவர் உடையார்